“பற்றி எரியும் மலையாள சினிமா.. தலைவிரித்தாடும் பாலியல் வன்கொடுமை..” கிழித்தெடுத்த சகிலா..!!
மலையாள சினிமா திரை உலகில் பல்வேறு நடிகைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தது அதன் பின்னரே நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து பல்வேறு மலையாள நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி பதிவிட்டு வருகின்றனர்..
கேரளா நடிகை நடிகையர்களுக்கு கேரளாவில் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் ஏராளம் என சொல்லலாம்., அப்படி இருக்க மலையாள நடிகைகளுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை என்றும் அங்கு அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாகவும் பல்வேறு தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு அதுகுறித்து விசாரணையை தொடங்க நீதிபதி ஹேமா தலைமையிலான ஒரு கமிட்டி அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது..
ஆனால் இந்த அறிக்கை வெளியானால் எங்கே நாம் மாட்டிகொள்வோமோ என்ற அச்சத்தில் இருந்த பெரும் புள்ளிகள்., நீதிமன்றத்தில் முறையிட்டு அந்த அறிக்கையை வெளியிடாமல் செய்தனர்.., ஆனால் தற்போது இந்த அறிக்கையானது கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி வெளியிடப்பட்டது…
அந்த விசாரணை நடத்த பட்ட பின்னரே நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கொடூரங்களை பற்றி தெரிவித்துள்ளனர்.., அதாவது “ஹீரோயின்கள் படுக்கை சீன்கள்., அறைகுறை ஆடையுடன் நடிக்க வைப்பது., நிர்வாணமாக நடிக்க வைப்பது போன்ற காட்சிகளில் கட்டாயம் ஆக்கப்பட்டு நடிக்க வைக்கப்பட்டதாகவும் அதை மறுத்தால் அவர்கள் மிரட்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்..
பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட நடிகைகள் :
அதற்கு எடுத்துக்காட்டாக மலையாள நடிகர் சங்கத்தின் செயலாளர் ரியாஸ் கான் 2018ம் ஆண்டின் பிரபல முன்னணி நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாதாக சொல்லப்படுகிறது.. அந்த குற்றச்சாட்டு எழுந்த பின்னரே சித்திக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்..
பிரபல மலையாள சினிமா இயக்குனர் ரஞ்சித் பெங்காலி நடிகையான ஸ்ரீலேகா மித்ரா., நடிகைக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்ட பின்னரே அவரும் தனது பதவியை ராஜினாமா செய்தார்..
மலையாள நடிகர்களில் முன்னணி நடிகர்களாக இருந்த நடிகர் திலிப் கடந்த 2017ம் ஆண்டு ஓடும் காரில் நடிகை பாவனாவை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.., அதன் பின் வழக்குகள் நடத்தப்பட்ட நிலையில் 5 ஆண்டுகளுக்கு பின்னரே திலீப்பிற்கு தண்டனை விதிக்கப்பட்டது அதன் பின்னர் 5 ஆண்டுகள் சினிமாவின் பக்கம் வாராமல் இருந்த பாவனா., ஒரு காபி ஷாப் தொடங்கி அதில் பயணித்து கொண்டு இருக்கிறார்..
இந்நிலையில் நடிகைகள் அளித்த புகாரின் பேரில் நடிகர் ஜெய் சூர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை குழு தொடர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது..
இதுகுறித்து நடிகை சகிலா ஒரு பிரத்யேக சேனலுக்கு அளித்திருந்த பேட்டியில்., “இப்போ தான் இது மாதிரி எல்லாம் நடக்குதுனு எல்லாம் தப்பா நினைச்சுட்டு இருக்காங்க., இந்த பிரச்சனை பழங்காலமா இருந்துட்டு தான் இருக்கு.. ஆனா ஆரம்பத்திலேயே எங்க மானம் போயிடுமோ என்ற பயத்தில பல பெண்கள் இதை பத்தி வெளிய சொல்லவில்லை..
இப்படி இருக்க மற்றொரு அதற்கு ஓகே சொல்லும் பொண்ணுங்களும் இருக்காங்க.., அது மாதிரி ஒரு சில பேர் பண்ற தப்பு எல்லாரையும் பாதிக்குது.. கைய கொடுத்தா பாலியல் சீண்டல பண்றானா ஓங்கி அடிக்கணும் அது அவனுக்கும் அவமானமா இருக்கும்.. அதே நேரம் ஒரு பொண்ணு கிட்ட இப்படி தொட்ட இப்படி தான் அடிப்பாங்களானு அவனுக்கும் உரைக்கும்.. இந்த இச்சை செயலுக்கு துணைபோகும் நடிகர் நடிகை மற்றும் இயக்குனர்களை சகிலா இவ்வாறே பேசியுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..