இரவில் இதை மட்டும் சாப்டாதீங்க…
ஆப்பிள் பழத்தை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம் இதில் உள்ள அசிடிக்கானது இரவில் நெஞ்செரிச்சலையும் செரிமானத்தையும் பாதிக்கும்.
தர்பூசணி அதிக அளவு நீர்ச்சத்து மற்றும் சர்க்கரை நிறைந்திருக்கிறது. இதில் இருக்கும் சர்க்கரை தூக்கத்தை தடுக்கிறது இதனால் இரவில் உண்பதை தவிர்க்கவும். மேலும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வும் ஏற்ப்படும் இதனால் தூக்கம் கெடும்.
வாழைப்பழத்தில் சர்க்கரை மற்றும் நார்ச்சத்து உள்ளதால் இது அஜீரணத்தை ஏற்ப்படுத்தக்கூடியது எனவே வாழைப்பழத்தை இரவில் சாப்பிடுவதை தவிர்த்து பகலில் உண்ண வேண்டும்.
பைனாப்பிளில் உள்ள புரோமெலைன் என்ற பொருள் செரிமான உறுப்பில் வீக்கத்தை ஏற்ப்படுத்தும் மேலும் தூக்கத்தை கெடுக்கும்.
சப்போட்டாவில் நார்ச்சத்தும் சர்க்கரையும் அதிக அளவில் உள்ளது. இந்த சர்க்கரை தூக்கத்தை கெடுக்கக்கூடியது எனவே இப்பழத்தை பகலில் சாப்பிட வேண்டும்.
கொய்யா பழத்தை இரவில் உண்டால் அது தூக்கத்தை கெடுத்து அசௌகரியத்தை ஏற்ப்படுத்தக்கூடியது.