தயிர் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..?
தயிர் என்பது பால் பொருட்களில் மிகவும் முக்கியமான ஒரு உணவு பொருளாகும். தயிரில் நன்மையளிக்கும் பாக்டீரியாக்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் அதிகமாக நிறைந்துள்ளது.
தயிரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இப்போது பார்க்கலாம்.
எலும்புகள் மற்றும் பற்கள்: தயிரில் இருக்கும் பாஸ்பரஸ், கால்சியம் ஆகியவை பற்களின் ஆரோக்கியத்திற்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் முக்கியமானது.
இதய ஆரோக்கியம்: தயிரில் இருக்கும் ஆரோக்கியமான புரதம் மற்றும் கொழுப்புகள் இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. தயிர் சாப்பிடும்போது இதயம் சம்மந்தபட்ட நோய்கள் குறைகிறது.
எடை இழப்பு: தயிரில் இருக்கும் உயர் புரதம் பசியின் உணர்வை கட்டுப்படுத்தி அதிகமாக உணவு சாப்பிடுவதை தடுத்து உடல் எடை இழப்புக்கு உதவுகிறது.
செரிமான மேம்பாடு: தயிரில் இருக்கும் நல்ல ஊட்டச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்துகிறது. வீக்கம், எரிச்சல், மலச்சிக்கல் போன்ற குடல் நோய்களை தடுக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி: தயிரில் இருக்கும் நன்மையளிக்கும் பாக்டீரியாக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உணவில் தயிரை அடிக்கடி சேர்த்துக் கொள்ளும்போது நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்த்து போராட உதவுகிறது.
ஆரோக்கிய கூந்தல்: தயிரில் இருக்கும் வைட்டமின்கள், புரோடீன்கள், தாது பொருட்கள் முடியின் வேர்க்கால்களை பலப்படுத்தி முடியின் உதிர்வை தடுத்து முடியின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது.
இரத்த சர்க்கரை அளவு: தயிரில் இருக்கும் புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.