பட்டுபுடவை வாங்கும்போது கடைபிடிக்க வேண்டிய குறிப்புகள்..!
ஒரு பட்டுபுடவை நெய்து உருவாகும்போதே அது யாருக்கு சென்று சேர வேண்டும் என்பது முன்பே எழுதப்பட்டிருக்கும். அப்படி நமக்கான புடவை வாங்கும்போது கண்டிப்பாக நன்றாக பார்த்து வாங்க வேண்டும். அதனை பற்றிய சில குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.
- முதலில் நீங்கள் எந்த நிகழ்விற்காக பட்டுப்புடவை வாங்க போறீங்க, எந்த நிறம் மற்றும் எந்த விலையில் வாங்க போறீர்கள் என்பதை பற்றி முடிவு செய்தல் வேண்டும்.
- வாங்கும் புடவை பளப்பளப்பாகவும் மென்மையாகவும் இருக்க வேண்டும். கையை வைத்து அழுத்தம் கொடுக்கும்போது அதன் ஜரிகை தனியே பிரிந்து வரக்கூடாது.
- பட்டுபுடவை வாங்கும்போது கட்டாயமான அதில் சில்க் மார்க் பதிவு இருக்கிறதா என்பதை உறுதிசெய்தல் வேண்டும். அப்படி சில்க் மார்க் பதிவு இருக்கும் புடவை மட்டுமே தூய்மையான பட்டு என்பது உறுதியாகும்.
- பட்டுபுடவையில் இருக்கும் ஜரிகை புடவையின் பார்டர் மற்றும் முந்தானை ஆகிய இரண்டு இடங்களிலும் ஒரே மாதிரி இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும் , இல்லையெனில் அந்த புடவையை தவிர்த்தல் நல்லது.
- புட்டுபுடவையை வாங்கும்போது அதனை கட்டாயம் நேரில் சென்று வாங்குவதே நல்லது. ஆன்லைன் மூலம் விற்க்கப்படும் புடவைகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும். அப்படி வாங்கும்போது புடவையின் நிறம் மாறுவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு.