மாதவிடாய் வலியை குறைக்க எளிய வழிகள்..!
மாதவிடாயில் பெண்கள் வலியால் அவதிப்பட்டுதான் வருகிறார்கள். அப்படி மாதவிடாயில் வரும் வலிக்கு சிறிது நிவாரணியாக ஒரு சில வழிகளை பற்றி இப்போது நாம் பார்க்கலாம் வாங்க,
1. தண்ணீரை சூடு செய்து அதனை வாட்டர் பாட்டலில் ஊற்றி, பின் பெண்கள் அந்த பாட்டலை வயிற்றில் வைத்து படுத்துக் கொண்டால் சிறிது நேரத்திலே தசைகள் தளர்ந்து வலிகள் குறைவதை பார்க்கலாம்.
2. மாதவிடாய் வலி சற்று குறைய, ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி இஞ்சி நசுக்கி சேர்த்துக் கொண்டு கொதிக்க வைக்க வேண்டும்,பின் அதனை வடிகட்டி அதில் சிறிது மஞ்சள் கலந்து குடித்து வர அவர்களுடைய ரணம் குறைந்து வலி நிவாரணம் கிடைக்கும்.
3. பெண்கள் மாதவிடாய் காலங்களில் வலி இருக்கிறதே என்று அப்படியே படுத்துக் கொண்டே இருக்காமல், உடலை அசைத்து லேசான உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றை அந்த நாட்களில் செய்து வரும்போது உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து வலி குறைகிறது.
4. மாதவிடாய் காலங்களில் வலி அதிகமாக உள்ளதால் சாப்பாடு தண்ணீர் என எதையுமே சரியாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் வலிகள் இன்னும் அதிகமாகுமே தவிர குறைய வாய்ப்பில்லை. இதற்கு அதிக தண்ணீரை பருகி உடலை ஈரப்பதமாக பார்த்துக் கொண்டால் தான் பிடிப்புகள் குறைந்து வலியும் சற்று குறையும்.
5. பெண்கள் மாதவிடாய் காலங்களில் பிடித்த உணவுகள் என கண்ட உணவுகளையும் உட்கொள்ளாமல் சத்துக்கள் நிறைந்த குறிப்பாக வைட்டமின் பி6 மற்றும் மெக்னீசியம் அதிகம் நிறைந்த உணவு பொருட்களை தேர்ந்தெடுத்து உட்கொண்டு வர மாதவிடாய் வலிகள் குறையும்.