கர்ப்பிணிகள் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் சமையத்தில் மருத்துவர்கள் ஆரோக்கியமான பானங்களை குடிக்க பரிந்துரைக்கிறார்கள், அந்தவகையில் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்ரி பார்ப்போம்.
- கர்ப்பமாக இருக்கும் நேரங்களில் ரத்த அழுத்தமானது கட்டுக்குள் இருப்பது மிகவும் முக்கியம். இதனால் இளநீரில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தின் அளவை கட்டுக்குள் வைத்து இதயம் சம்மந்தப்பட்ட நோய்களிடமிருந்து காக்கிறது.
- கர்ப்ப காலங்களில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது முக்கியமானது. கர்ப்பிணிகளுக்கு நீரிழப்பு ஏற்பட்டால் அது தாய்க்கும் குழந்தைக்கும் பல பாதிப்பை உண்டாக்கும். எனவே உடலுக்கு நீரேற்றம் தரும் சிறந்த பானமாக இளநீர் உள்ளது.
- இளநீரில் உள்ள சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சில முக்கியமான எலக்ட்ரோலைடுகள் திரவங்களை சமநிலையில் வைக்கிறது, நீரிழப்பையும் தடுக்கிறது.
- கர்ப்ப காலங்களில் மலச்சிக்கல், அஜீரண கோளாறுகள் போன்ற வயிற்று கோளாறுகள் ஏற்படும், இதனை தடுக்க இளநீரில் இருக்கும் அதிக அளவு நார்ச்சத்து உதவுகிறது.
- இளநீரில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் மற்றும் பிறவகை சத்துக்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இதனால் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சளி, இருமல் போன்றவை ஏற்படுவதை தவிர்க்கலாம்.
- இளநீரில் இருக்கும் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி தாய் உடலின் ஆரோக்கியத்திற்கும் கரு நன்றாக வளரவும் உதவுகிறது.