ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் சிக்கிய பிரபல ரவுடி..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 23-பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வேலூர் மத்திய சிறையில் கைதியாக இருக்கும் பிரபல வட சென்னை தாதா நாகேந்திரன் 24-வது நபராக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய மகன் அஸ்வத்தமன் உடன் சேர்ந்து நாகேந்திரனும் வேலூர் மத்திய சிறையில் இருந்தே திட்டம் போட்டதாக செம்பியம் தனிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி அன்று சிறையில் இருக்கும் நாகேந்திரனை கைது செய்வதற்கு வாரண்ட் பெற்ற சென்னை செம்பியம் தனிப்படை போலீசார் 9-ம் வேலூர் மத்திய சிறைக்கு சென்று அங்கு சிறைத்துறை அதிகாரிகளிடம் கைது செய்வதற்கான வார்ண் ஆவணங்களை சமர்ப்பித்தனர்.
அதற்கு பின்னர் நாகேந்திரன் பார்மல் கைது செய்யப்பட்டதற்கான ஆவணத்தை போலீசார் நாகேந்திரனிடம் வழங்க முயன்ற போது, “கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை எதற்காக வழக்கில் சேர்த்திருக்கிறீர்கள். என் மகன் அஸ்வத்தமனை எதற்காக கைது செய்து இருக்கிறீர்கள் கூறி கைது ஆவணத்தை வாங்காமல் அதில் கையெழுத்து போடாமல் போலீசாரிடம் ரகளை செய்தார்.
அப்போது 30 நிமிடங்களுக்கு மேலாக காத்திருந்த போலீசார் நாகேந்திரன் கையெப்பம் இட மறுத்த நிலையில், கைதுக்கான ஆவனத்தில் சிறைத் துறை அதிகாரிகளின் கையொப்பம் பெற்று பின்னர் கைது செய்வதற்கான ஆவணத்தை நாகேந்திரன் உள்ள அறைக்கு முன்பாக சுவரில் ஒட்டி விட்டு சென்றனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் கைது நாகேந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின் நாகேந்திரனை கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதற்கு போலீஸார் நீதிமன்றத்தில் அனுமதி கேட்கும் இந்த நிலையில், தற்போது வேலூர் மத்திய சிறைத்துறை அனுமதியோடு நாகேந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த 10 பேர்கொண்ட வேலூர் போலீஸார் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையில் இருந்து அழைத்துச் சென்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாகேந்திரனை போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்க செம்பியம் தனிப்படை போலீஸ் நீதிமன்றத்தில் அனுமதி கேட்கும் அன அனுமதித்தால் நாகேந்திரன் போலீஸ் கஸ்டடியல் எடுத்து விசாரிக்கப்படுவர்.
நாகேந்திரனை விசாரிக்கும் பட்சத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல உண்மைகள் தெரியவரும். இந்த ரவுடி தரப்பிற்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில் போட்டிகள் காரணமாக முன்விரோதம் இருந்திருக்கலாம், அதனால் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..