தேங்காய் பால் கெட்டியாக இருக்கணுமா..? இதோ சூப்பர் டிப்ஸ்..!
எலுமிச்சையில் இருந்து சாறு எடுக்கும் முன் பழத்தை சிறிது வெந்நீரில் போட்டு வைக்க சாறு அதிகமாக வரும்.
தேங்காய் பிடிக்காதவர்கள் குழம்பு, பொரியல், கூட்டு ஆகியவற்றில் கசகசாவை அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.
இட்லிக்கு மாவு அரைக்கும்போது அதில் சிறிது வடித்த சாதம் சேர்த்து அரைத்தால் இட்லி, தோசை பஞ்சு போல வரும்.
குழம்பில் ரெடிமேட் புளி பேஸ்ட் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். இவை உணவில் சுவையை மாற்றுகிறது. புளியை வீட்டில் நீரில் கரைத்து சேர்க்க வேண்டும்.
ஆரஞ்சு மற்றும் திராட்சை பழச்சாற்றில் கொஞ்சம் தேன் கலந்தால் சுவை அதிகமாகும்.
தேங்காய் பால் கெட்டியாக தேவைப்பட்டால் சிறிது அரிசிமாவினை அதில் கலந்து கொள்ளலாம்.
பலாக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் இருக்கும் பித்தம் நீங்கும்.
ரவை உப்புமா மற்றும் சேமியா செய்யும்போது முதலில் வெறும் வாணலில் லேசாக வறுத்து பின் செய்தால் சுவை அதிகமாக இருக்கும்.
அருகம்புல்லில் இருந்து சாறு எடுத்து சப்பாத்தி மாவில் பிசைந்து சப்பாத்தி சுட உடலுக்கு ரொம்ப நல்லது.
கீரை பொரியலில் தேங்காய் துருவலை கடைசியாக சேர்த்துக் கொண்டால் சுவை அதிகமாக இருக்கும்.
நெத்திலி மீன் குழம்பில் புளி சேர்ப்பதற்கு பதில் மாங்காய் சேர்த்தால் சுவை கூடும்.
