உணவிற்கு பின் தண்ணீர் குடிக்கலாமா…?
நாம் உணவு கூட சில நாட்களுக்கு சாப்பிடாமல் இருக்கலாம் ஆனால் தண்ணீரை குடிக்காமல் நம்மலால் இருக்கவே முடியாது. தண்ணீர் குடிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. நாம் உட்கொள்ளும் உணவை செரிமானமடையச் செய்து , உண்டாகும் கழிவுகளையும் வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தினமும் காலையில் முதலில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீரை குடித்து வர உடலுக்கு நீரோட்டம் கிடைக்கும். உணவு உட்கொள்ளும்போது தண்ணீரை அருந்தக்கூடாது.
உணவு சாப்பிடுவதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீரை குடிக்கலாம் இது உணவில் இருக்கும் ஊட்டச்சத்துகளை நம் உடலுக்கு அப்படியே தருகிறது. சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கலாம் இது சாப்பிடும் உணவை உடைத்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.
ஆனால் சாப்பிட்ட பிறகு அதிகமான தண்ணீரை குடிக்க கூடாது இது செரிமான கோளாறுகளை உண்டாக்கும்.
இரவில் தூங்குவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது இரவில் ஏற்ப்படும் நீர்ச்சத்து குறைப்பாட்டை தடுக்கும்.
உடற்பயிற்சியில் ஈடுபடும் முன்பு, இடையில் மற்றும் கடைசியிலும் தண்ணீர் குடிப்பது தசைகளில் ஏற்ப்படும் தளர்வை போக்கும்.
