ரத்த தானம் செய்வதினால் இவ்ளோ நன்மைகளா..!
உடலில் அதிகபடியான இரும்புச்சத்து இருந்தால் அது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்ப்பட வழிவகுக்கும். ஆனால் ரத்த தானம் செய்து வருவதினால் இத்தகைய பாதிப்பை நாம் தடுக்கலாம்.
2. புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்
உடலில் இருக்கும் அதிகமான இரும்புச்சத்தால் புற்றுநோய் ஏற்ப்பட அதிக வாய்ப்பு உண்டு. இதனால் இரும்புச்சத்தை பராமரிப்பில் வைத்துகொண்டால் புற்றுநோய் வருவதை தடுக்கலாம். கல்லீரல், நுரையீரல், வயிறு, தொண்டை ஆகியவற்றில் உண்டாகும் புற்றுநோயை தடுக்கும்.
ரத்த தானம் செய்வது உடலின் எடையை குறைக்க உதவுகிறது. 450 மில்லி லிட்டர் ரத்த தானம் செய்வதினால் நம் உடம்பில் 650 கலோரிகளை அழிக்கிறது இதனால் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வந்தால் உடலை சீராக பராமரிக்கலாம்.
ரத்த தானம் செய்வதினால் உடம்பில் புதிய ரத்த அணுக்கள் உற்பத்தி ஆகும். இதனால் உடம்பு புத்துணச்சியாக செயல்படுவதை காணலாம். உடம்பும் சுறுசுறுப்பாக இருக்கும்.
ரத்தத்தில் இருக்கும் நச்சுகளை அழிப்பதே கல்லீரலின் வேலையாகும் ஆனால் ரத்தத்தில் அதிகபடியான இருப்புச்சத்து இருந்தால் அது கல்லீரலை சரியாக செயல்பட விடாது. இதனால் இந்த இரும்புச்சத்தானது இரத்த செல்களையும் சேதப்படுத்தும் கல்லீரலையும் பாதிக்கும், எனவே ரத்த தானம் செய்வதினால் கல்லீரலை காக்கலாம்.