வேலை வாங்கி தருவதாக கூறி..! 100 பெண்களை..! பரபரப்பான பீகார்.!
பீகாரில் முசாபர்பூர் பகுதியில் மாதம் 50,000 ரூபாய் ஊதியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பி பல்வேறு பெண்கள் மற்றும் ஆண்கள் விண்ணப்பித்துள்ளனர். இதனை பயன் படுத்திக்கொண்ட அந்த மர்ம கும்பல் குறிப்பிட்ட 100 பெண்களை மட்டும் அதவாது.., அந்த ஆன்லைன் வேலை வாய்ப்பு விண்ணப்பத்தில் போட்டோ அனுப்ப செய்து அதில் 100 பெண்களை மட்டும் தேர்ந்தெடுத்து…
முசாபூர் பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து.., ஒரு குடோனில் அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை செய்துள்ளனர். மேலும்.., அதில் சில பெண்களுக்கு மயக்கம் தெரிந்தநிலையில் வெளியே விட்டுவிடுமாறு கதறியுள்ளனர்.
ஆனால் அவர்களை பெல்ட்டால் அடித்து பாலியல் துன்புறுத்தலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒரு பெண் மட்டும் தப்பித்து.., நடந்த இந்த கொடூரம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல்துறையினர்.., சம்பவ இடத்திற்கு சென்று மற்ற பெண்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மேலும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த 9 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுபோல ஆன்லைனில் வரும் லிங்க்களை நம்பி பெண்கள் ஏமாற வேண்டாம் எனவும் காவல்துறையினர் கேட்டுகொண்டுள்ளனர்…
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..