பெண்களின் ஆரோக்கியமான உடலுக்கு அசத்தலான டிப்ஸ்..!! படிக்க மறக்காதிங்க..!
பெண்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மிகவும் முக்கியமானவர்கள். அவர்களை நன்றாக பார்த்துக் கொண்டால் தான் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக இருக்கப்பார்கள்.
பெண்கள் அன்றாடம் வழைப்பழத்தை சாப்பிட வேண்டும்.
வாழைப்பழம் சாப்பிடுவதினால் பொட்டசியம் உடலுக்கு அதிகமாக கிடைக்கிறது இதனால் மாரடைப்பு,பக்கவாதம் மற்றும் ரத்த
அழுத்தம் ஆகியவற்றில் இருந்து விடுவிக்கிறது.
கீரையை தினசரி உணவில் சேர்த்து கொள்வது அனைவருக்குமே நன்மையை தரும். அதிலும் மகளிர் வாரம் ஒரு முறையேனும் கீரையை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
கீரை உடல் எடையை கட்டுப்படுத்தும். கர்ப்பகால நீரிழிவு, ஒவ்வாமை போன்ற நோய்களை தடுக்கிறது.
கால்சியம் பாலில் நிறைந்து காணப்படுகிறது, எனவே பெண்கள் பாலினை தினசரி பருகினால் கால்சியம் அதிகமாக கிடைக்கும் இதனால் எலும்புகளுக்கு நல்ல பலம் தரும்.
எலும்பு தேய்மானத்தில் இருந்து கூட விடுபடலாம். வைட்டமின் டி சத்தும் கிடைக்கிறது.
மகளிருக்கு மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து காக்கிறது. ஓட்ஸ் நிறைய சத்துக்களை உள்ளடக்கியதினால் பெண்களுக்கு உடலுக்கு மிகவும் ஏற்றது.
உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கிறது.
பூசணிக்காய் கண்பார்வையை கூட்டுகிறது. இதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால் முதியோர்களுக்கு ஏற்ப்படும் கண் கோளாறுகளை குறைக்கச் செய்கிறது.
பூசணிக்காய் பெண்களுக்கு தயாரிக்கப்படும் அழகு சாதன பொருட்களிலும் கலக்கப்படுகிறது.
மகளிருக்கு கீல்வாதம் ஏற்ப்படாமல் தடுக்கிறது. சால்மன் மீனில் ஒமேகா 3 அமிலங்கள் உள்ளன.
மீன் சாப்பிடுவது பொதுவாக கண்ணுக்கு மிகவும் நல்லது.
வால்நட்டில் இரத்த ஓட்டத்தை சீர்செய்வதற்கான கொழுப்பு அமிலங்கள் காணப்படுகிறது.
வால் நட்ஸ் இதயத்திற்க்கு ஆரோக்கியமானது.
-சாந்தி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..