அன்றாடம் 30 நிமிடம் உடற்பயிற்சி அவசியமா..?
உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் புத்துணர்ச்சி அடைகிறது.
ஒரு நாளில் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.
யோகா,நடைப்பயிற்சி,ஓட்டம்,நீச்சல்,சைக்கிள் ஓட்டுதல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செய்தல் வேண்டும்.
உடற்பயிற்சி உடலில் உள்ள கழிவுகளை முறையாக வெளியேற்றி உடலின் செயல்பாடுகளை முறையாக செயல்பட உதவுகிறது.
சுவாச கோளாறுகள்,சர்க்கரை நோய்,ரத்தகொதிப்பு,இருதய நோய் ஆகியவற்றை தொடர் உடற்பயிற்சி மூலம் கட்டுக்குள் வைக்கலாம்.
நோய்களை எதிர்க்கக்கூடிய திறனும் அதிகமாக இருக்கும்.