போதை பொருள் புழக்கம்..! செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு..!
குஜராத்தில் இருந்து போதை பொருள் வருவதை தடுக்க சொல்ல வேண்டும். காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு…
தமிழக ஆளுநர் முதலில் உள்துறை அமைச்சரை சந்தித்து தமிழ்நாட்டிற்கு குஜராத்தில் இருந்து போதை பொருள் வருவதை தடுக்க சொல்ல வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம் கூறியுள்ளார்.
காங்கிரஸ் செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையதில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை.,மின் கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு.,
உதய் மின் திட்டத்தில் அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர் இருக்கும் வரை உதய் மின் திட்டத்தில் கையொப்பமிடவில்லை., ஆனால் அவர் காலமான பிறகு உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதனால் அதிகாரம் அனைத்தும் ஒன்றிய அரசிடம் சென்று விட்டது. தற்போது ஒன்றிய அரசின் உத்தரவு மற்றும் அழுத்தத்தின் பெயரில் இந்த மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் காங்கிரஸ் சார்பாக முதலமைச்சர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் திரும்ப பெற வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.
தமிழக பாதுகாப்பு குறித்து அமித்ஷாவிடம் ஆளுநர் சந்தித்து பேசியது குறித்த கேள்விக்கு., முதலில் ஆளுநர் உள்துறை அமைச்சரை சந்தித்து குஜராத்தில் இருந்து போதைப்பொருள் வருவதை தடுக்க வேண்டும் என்றார் மேலும் தமிழ்நாட்டிற்கு குஜராத்தில் இருந்து தான் போதை பொருள் வருகிறது. போதைப் பொருளை தடுத்தாலே எல்லா குற்றங்களும் குறைந்துவிடும் என அவர் தெரிவித்தார்..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..