வாட்டர் பாட்டலை இப்படி கழுவுங்க..!
இருமல் சரியாக சீரகத்துடன் சிறிது கற்கண்டு சேர்த்து மென்று சாப்பிடும்போது இருமல் சரியாகும்.
சீரகத்தை வறுத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து கசாயமாக குடிக்கும்போது நரம்புகள் வலிமை அடையும். இதனால் நரம்பு தளர்ச்சியும் குணமாகும்.
கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இதனால் கேரட்டை பொரியலாகவோ, ஜீஸ் செய்தோ, கூட்டாகவோ செய்து சாப்பிடலாம்.
காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடும்போது அது உடலில் செல்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இது மூட்டு வலி, முடி உதிர்தல் மற்றும் பக்கவாத நோயை சரியாக்கும்.
ஓமத்தை பொடியாக்கி ஒரு துணியில் கட்டி நுகர்ந்து பார்க்கும்போது மூக்கடைப்பு பிரச்சனை நீங்கும்.
நுரையீரல் நோய்களை குணமாக்க நன்றாக முற்றிய சொடக்கு தக்காளி பழத்தை சாப்பிடலாம்.
முடி அடர்த்தியாக வளர வைட்டமின்கள், இரும்புச்சத்து, துத்தநாகம், ஒமேகா 3 போன்ற ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியம்.
அசைவ உணவை அதிகமாக சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் சீரகம் அல்லது ஓமத்தை நீரில் கொதிக்கவைத்து குடிக்கலாம்.
எலும்புகள் இரும்புபோல வலுபெறுவதற்கு முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் சாப்பிடலாம்.
முட்டைகோஸ் வாசனை பிடிக்காதவர்கள் இஞ்சி துண்டை நசுக்கி முட்டைகோஸ் பொரியலில் சேர்க்க அந்த வாசனை வராது.
வாட்டர் பாட்டலை சுத்தம் செய்யும்போது அதில் நீரை நிரப்பி சிறிது கல் உப்பு போட்டு சிறிது நேரத்திற்கு அப்படியே வைத்து பின் கழுவினால் அழுக்குகள் எளிமையாக நீங்கிவிடும்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)