நீங்க தூங்கும்போது குறட்டை விடுபவரா? அப்போ இது உங்களுக்குத்தான்..!
தூக்கத்தில் வரும் குறட்டை ஒலி பலரையும் பெருமளவில் பாதிக்கும். இது தொந்தரவு மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். இதில் குறட்டை எதனால் வருகிறது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
குறட்டை என்பது தூக்கத்தின் போது ஏற்படும் ஒரு சத்தமாகும். சுவாசிக்கும்போது காற்றானது வாய், தொண்டை வழியாக மூச்சுகுழாய் அடைகிறது. அப்படி காற்று செல்லும் பாதையில் எங்கையாவது அடைப்பு ஏற்பட்டால் காற்று சுற்றி இருக்கும் திசுக்களை அதிரச்செய்கிறது, இதனால் தான் குறட்டை ஒலி ஏற்படுகிறது.
குறட்டை வகைகள்:
வாய் குறட்டை: வாய் திறந்து தூங்கும்போது வரும் குறட்டை வாய் குறட்டை. இது நாக்கு அதிர்வால் உண்டாகிறது.
நாசி குறட்டை: மூக்கு அடைப்பு நிலையில் வாய் வழியாக சுவாசிக்கும்போது உண்டாகும் குறட்டை நாசி குறட்டை. இது சைனஸ் மற்றும் ஒவ்வாமையால் உண்டாகிறது.
தொண்டை குறட்டை: தொண்டை பகுதியின் திசுக்கள் சற்று தளர்வாக இருப்பதால் உண்டாவது தொண்டைக் குறட்டை. இது குண்டாக இருப்பவர்கள் மற்றும் வயதானவர்களிடன் காணப்படும்.
குறட்டை வர காரணம்:
- தொட்டை பெரியதாக இருப்பவர்களுக்கு குறட்டை வரலாம்.
- தூக்கத்தில் தசைகள் தளர்ச்சி பெறுவதால், நாக்கு மற்றும் தொண்டை பின்னாடி சென்று காற்று பாதையை அடைக்கும்.
- உடல் பருமனாக இருப்பவர்களுக்கு தொண்டை பகுதியில் கொழுப்புகள் அடைத்து காற்று பாதையை குறுக்கி குறட்டை உண்டாகும்.
- புகை மற்றும் மது குடிப்பதால் நாக்கு மற்றும் தொண்டை பகுதியை தளர்த்தி குறட்டையை உண்டாக்கும்.
- சைனஸ் மற்றும் அலர்ஜி போன்றவை மூக்கை அடைத்து வாய் வழியாக சுவாசிக்கும்போது குறட்டையை உண்டாக்கும்.
- மல்லாந்து படுத்து தூங்கும்போது சில நேரங்களில் குறட்டை உண்டாகலாம்.
குறட்டை தானே என அலட்சியமாக இருந்தால் அது சில நேரங்களில் தூக்கத்தில் மூச்சுதிணறலையும் ஏற்படுத்தும். அப்படி மூச்சுதிணறலோடு தூங்கும்போது பல நேரங்களில் சுவாசமானது நின்றுவிடும்.
எனவே குறட்டை என அலட்சியமாக இல்லாமல் அது எதனால் வருகிறது என கண்டறிந்து தகுந்த மருத்துவரை பார்த்து சிகிச்சை பெற வேண்டும்.