உங்களுக்கு கருப்பு எள் பற்றி தெரியுமா..?
பெண்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்து மிக மிக முக்கியமானது. குழந்தை பிறந்த பின்னர் எலும்புகளுக்கு கால்சியம் சத்து அவசியமானது. அதனால் தான் பால் முக்கிய உணவு பொருளாக இருந்து வருகிறது.
கால்சியம் சத்தானது பால், பழம், பயிறு, மீன், கீரை, நட்ஸ் ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது, அந்த வரிசையில் எள்ளில் எந்த அளவிற்கு கால்சியம் சத்து இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
எள்ளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்:
எள்ளில் புரதச்சத்து, நார்ச்சத்து, மக்னீசியம், ஆண்டி ஆக்ஸிடண்டுகள் மற்றும் அதிக அளவில் கால்சியம் சத்து இருக்கிறது.
எள்ளை தினமும் சாப்பிடும்போது இதயத்திற்கு ஆரோக்கியம், மலச்சிக்கலுக்கு தீர்வு, ரத்த சர்க்கரை கட்டுபாடு, சருமம், தலைமுடி மற்றும் ஹார்மோன் சமநிலை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது.
குறிப்பாக பாலை விட எள்ளில் கால்சியம் சத்து அதிகமாக இருக்கிறது. 100 கிராம் பாலில் 125 மி.கி கால்சியம் இருக்கிறது ஆனால் 100 கிராம் எள்ளில் 1000 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது.
உணவில் எள் எப்படி சேர்க்கலாம்:
- எள்ளை வெறும் வாணலில் சேர்த்து வறுத்து பொடி செய்துக் கொண்டு அதனை தேனுடன் கலந்து சாப்பிடலாம்.
- எள்ளை வறுத்து முழுசாகவோ அல்லது பொடி செய்தோ அதில் வெள்ளம் சேர்த்து லட்டு செய்து சாப்பிடலாம்.
- வறுத்த எள் உடன் சிறிது தேன் மற்றும் நெல்லிக்காய் சேர்த்து கலந்து சாப்பிடலாம்.
- எள்ளுடன் மிளகாய், உளுந்து மற்றும் சீரகம் சேர்த்து வறுத்து இட்லி பொடி செய்து சாப்பிடலாம்.
- சமையலுக்கு தினமும் எள் எண்ணெயை பயன்படுத்தலாம்.
குறிப்பாக இது பாலை விட பலமடங்கு கால்சியம் சத்தை கொண்டுள்ளது.