தண்ணீர்விட்டான் கிழங்கின் நன்மைகள்..!
தண்ணீர்விட்டான் கிழங்கை பால் அல்லது நீருடன் சேர்த்து அரைத்து பின் காயவைத்து பொடியாக்கி சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.
தண்ணீர்விட்டான் கிழங்கை பொடியாக்கி தினமும் நீரில் கலந்து பருகி வர உடலில் இருக்கும் சூடு குறையும்.
குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க தண்ணீர் விட்டான் கிழங்கை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வரலாம்.
தண்ணீர்விட்டான் கிழங்கு பொடியை நெய்யில் கலந்து இருவேளை சாப்பிட உடல் சோர்வு போகும்.
மாதவிடாயில் போகும் அதிகபடியான ரத்தப்போக்கிற்கு தண்ணீர்விட்டான் கிழங்கு சாறுடன் சர்க்கரை கலந்து சாப்பிடலாம்.
கால் பாதங்களில் எரிச்சல் உண்டானால் தண்ணீர்விட்டான் கிழங்கின் சாறை தடவி வரலாம்.
தண்ணீர்விட்டான் கிழங்கை சாப்பிடும்போது அது உடலின் உள் உறுப்புகளை ஆற்றும் தன்மை கொண்டது.
தண்ணீர்விட்டான் கிழங்கை ஆண்கள் சாப்பிடும்போது அது ஆண்மையை அதிகரிக்கும்.
தண்ணீர்விட்டான் கிழங்கு ரத்த அழுத்தத்தை குறைக்க உதவியாக இருக்கிறது.
உடலின் உள்ளுறுப்புகளில் உண்டாகும் புற்றுநோயை எதிர்த்து போராட இது உதவுகிறது.