பாலியல் வன்கொடுமையில் சிக்கிய நிவின் பாலி..!! மறைக்கப்பட்ட துபாய் விவகாரம்..!!
மோகன்லால், திலிப் முதல் நிவின்பாலி வரை கேரளா நடிகர்கள் மீது பாலியல் வன்கொடுமை தொடர்ந்து வரும் நிலையில் நீதி அரசர் ஹேமா கமிட்டி தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்..
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் (Adjustment) என்ற ஒரு விஷயம் இருப்பதால் பல பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில் இதுகுறித்து.. கேரளா நீதி அரசர் ஹேமா கமிட்டி தலைமையிலான குழு பாலியல் வன்கொடுமையால் பாதிகப்பட்ட பெண்கள் புகார் அளித்தால் அது பற்றிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிக்கை வெளியிட்டிருந்தார்…
ஐந்து வருடங்களுக்கு பின் இந்த அறிக்கை வெளியான நிலையில் பல்வேறு முடிவுகளும் எடுக்கப்பட்டு வருகிறது.. இதனால் மலையாள சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது..
கடந்த 2017ம் ஆண்டு நடிகை பாவனா., நடிகர் திலிப் என்பவரால் ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.. இதுபற்றி பாவனா கொடுத்த புகாரின் பேரில் திலீப் தரப்பில் பாவனாவிற்கு பாடம் கற்பிப்பதற்காக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவித்தார்..
மேலும் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதை வீடியோவாக எடுத்து அதை பல அரசியல்வாதிக்களுக்கும் பகிர்ந்துள்ளார்.
WCC :
அதன் பின்னர் இந்த விவாகரம் தீவிரம் காட்ட தொடங்கியது.. வுமென் இன் சினிமா கலெக்ட்டிவ் (WCC) என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. அதன் பின் நடிகைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை தொடர்ந்து., பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து வழக்கு பதிவு செய்வதற்காக WCC என்ற மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வல்சா குமாரி சமர்ப்பித்த அறிக்கையானது 5 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் ஆகஸ்ட் 19ம் தேதி அனைத்து ஆதரங்களுடன் மீண்டும் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது..
இதுகுறித்து நீதிபதி ஹேமா கமிட்டி தலைமையில் கூறுவதாவது “பாலியல் வன்கொடுமை, சட்டவிரோத போதைப்பொருள் பழக்கம், பாலியல் சீண்டல், பணத்தை கொடுத்து நீதியை மறைப்பது, ஆண் பெண் சம்பள பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளது..
மலையாள இயக்குனர் பாபுராஜ், நடிகர் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, எடவேல பாபு, துளசிதாஸ் மற்றும் சிபிஐ-எம் எம்எல்ஏ விச்சு முகேஷ் ஆகியோர் மீது பல மலையாள பெண் நடிகர்கள் மற்றும் இளைய கலைஞர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப் பட்டிருப்பதாகவும் மற்றும் தவறான நடத்தையில் வழிநடத்தப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் நடிகர் நிவின்பாலி தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக எர்ணாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.. அதாவது அந்த பெண் அளித்த புகாரின் பேரில் நிவின்பாலி, தயாரிப்பாளர் ஏ.கே.சுனில், பஷீர் மற்றும் ஸ்ரேயா என்ற பெண் உட்பட 6 பேர் மீது புகார் அளித்துள்ளார்..
புகாரில் பெண் குறிப்பிட்டிருப்பதாவது.., “சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, துபாய் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.. மேலும் இதுகுறித்து அந்த பெண் புகார் அளிக்க சென்ற போது துபாயில் நடந்த கொடுமை என்பதால் அந்த புகாரானது இந்தியாவில் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஹேமாகமிட்டி மூலம் பலமுறை நடவடிக்கை மேற்கொள்ள முயற்சித்தும் நிவின்பாலி அதை மூடி மறைத்ததாக சொல்லப்படுகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..