துளசி பால் ஒன்னு போதுமா..?
துளசி ஒரு நறுமணமான மூலிகையாகும். இதன் விதைகளை நீர், பழச்சாறு மற்றும் பால் ஆகியவற்றில் கலந்து குடிக்கலாம்.
துளசியில் வைட்டமின் ஏ, சி மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. அன்றாடம் காலை வேளையில் டம்ளர் பாலில் சிறிது துளசி இலைகளை சேர்த்து கலந்து பருகி வர உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
அப்படி பருகும் பாலில் எத்தனை நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பற்றி பார்க்கலாமா,
சளி, இருமல் குணமாகும்:
துளசி இலைகளில் பாக்டீரியாவை எதிர்த்து போராடும் தன்மை இருப்பதால் இது சளி மற்றும் இருமலை குணப்படுத்த உதவுகிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:
துளசியில் ஆண்டி ஆக்ஸிடண்ட்டுகள் இருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலை நோய்களுக்கு எதிராக செயல்பட உதவுகிறது.
மன அழுத்தம் குறைகிறது:
துளசியில் மனதிற்கு அமைதி அளிக்கும் பண்புகள் இருப்பதால் மன அழுத்தம் குறைகிறது. மேலும் நரம்பு மண்டலத்தை தளர்வடைய உதவுகிறது.
செரிமானத்தை ஊக்குவிக்கும்:
துளசியானது செரிமான நொதிகளை உற்பத்தி செய்வதால் ஜீரண மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கல், வயிறு உப்பசம், வாயு பிரச்சனைகளை விரட்டுகிறது.
சர்க்கரையை சமன் செய்யும்:
துளசியானது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதால் இது இரத்த சர்க்கரை அளவை சமன்செய்கிறது.
புற்றுநோயை தடுக்கும்:
துளசியானது புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராட உதவுகிறது. செல்களின் சேதத்தை தடுக்கிறது.
வாய் சுகாதாரம்:
துளசியானது நுண்ணுயிர் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தி உள்ளது. இது வாய் துர்நாற்றத்தை போக்கி ஈறுகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
வலி நிவாரணி:
துளசியில் இயற்கையாகவே வலி நிவாரணி இருப்பதால் இது இடுப்பு வலி, தலைவலிக்கு உதவியாகும்.
சரும ஆரோக்கியம்:
துளசியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இது முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளுக்கு எதிராக செயல்படுகிறது.