உடம்பு சிக்குனு இருக்க சியா சீட்ஸ்..!
சியா விதையில் பலவித நன்மைகள் நிறைந்துள்ளது. சியா விதையில் நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலம், புரதம் மேலும் பல்வேறு வகையிலான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது மலச்சிக்கலை தடுத்து செரிமானத்தை ஊக்குவிக்கிறது.
சியா சீட்ஸ் சாப்பிடுவதால் உடலை குளிர்ச்சியடைவதுடன் உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கிறது.
காலையில் ஒரு ஸ்பூன் சியா விதைகளை நீரில் அரை மணி நேரத்திற்கு ஊறவைத்து தினமும் சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். இந்த விதைகளை நீரில் மட்டும் இல்லாமல் பழச்சாறு, தயிர், சாலட்டுகள் ஆகியவற்றிலும் சேர்த்து சாப்பிடலாம்.
சியா விதைகளின் முக்கியான பணி வயிற்றௌ சுத்தமாக வைப்பதுடன் நீண்ட நேரத்திற்கு வயிற்றை நிரப்பியும் வைத்திருக்கும். இதனால் முக்கியமாக உடல் எடை குறைகிறது.
சியா விதைகளை இரவில் ஊறவைத்து காலையில் 21 நாட்களுக்கு தயிருடன் கலந்து சாப்பிட நல்ல மாற்றம் தெரியும்.
இரவில் ஊறவைத்த சியா விதைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது தொப்பை மற்றும் கொழுப்புகள் நன்றாக குறைவதை காணலாம்.
இது இதயத்தை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.