நீங்கள் இரவில் தலைக்கு குளிப்பவரா..? அப்போ இது உங்க கவனத்திற்கு தான்..!
தினமும் காலையில் குளிக்கும்போது அது உடலுக்கு புத்துணர்ச்சியும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. பெரும்பாலும் காலையில் குளிப்பது பலரும் வழக்கமாக வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் சில நபர்கள் இரவில் குளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆனால் இது உடலுக்கு சில பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
அதில் உண்டாகும் பிரச்சனைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோமா..
தலைவலி:
இரவில் சிலருக்கு தலைக்கு குளிக்கும்போது அது தலைவலியை ஏற்படுத்தும். குளிர்ந்த நீரில் குளிக்கும்போது தலையில் இருக்கும் நரம்புகள் சுருங்கி தலைவலியை ஏற்படுத்தும். சைனஸ் பிரச்சனை உடையவர்களுக்கு இது ஒற்றை தலைவலியை உண்டாக்கும்.
சளி மற்றும் இருமல்:
இரவில் தலைக்கு குளிக்கும்போது அது சிலருக்கு சளி, இருமல் ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். குளிர்ந்த காலநிலையில் தலைக்கு குளிக்கும்போது அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து உடலுக்கு சளி, இருமல், காய்ச்சல், தொண்டை பிரச்சனை ஆகியவற்றை ஏற்படுத்தும்.
தூக்கமின்மை:
இரவில் தலைக்கு குளிக்கும்போது அது உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி தூக்கமின்மை ஏற்படும். மேலும் சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் தூக்கம் வருவது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும்.
உடல் வலி:
இரவில் குளிர்ந்த நீரில் தலைக்கு குளிக்கும்போது அது தசைகளை சுருக்கி, உடலில் வலி, தசைப்பிடிப்பு ஆகியவை ஏற்படுத்தும். இது தோள்பட்டை வலி, கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் வலியை ஏற்படுத்தும்.
பொடுகு தொல்லை:
இரவில் தலைக்கு குளிக்கும்போது அது சிலருக்கு பொடுகு பிரச்சனையை உண்டாகும். தலை ஈரமாக இருந்தால் அது பொடுகு தொல்லையை அதிகரிக்கும்.
முடிந்தவரை இரவில் தலைக்கு குளிப்பதை தவிர்க்க வேண்டும். குளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் லேசான வெந்நீரில் குளித்தல் வேண்டும். பிறகு தலைமுடியை நன்றாக உலர்த்த வேண்டும். உடல்நிலை சரியில்லாதபோது இதனை தவிர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது.