மழைகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்..!!
மழை காலத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனம் அடைவதால், நோய் தொற்றுகள் ஏற்படுவதோடு பல விதமான நோய்களை ஏற்படுத்தும். உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில உணவுகளை தினமும் சேர்த்துக்கொண்டாலே போதும்.
கீழ்கண்ட உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.
சிட்ரஸ் பழங்கள் :
ஆரஞ்சு, எழும்பிச்சை, மற்றும் திராட்சை பழம் போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின்-சி இருப்பதால். வைட்டமின் சி, வெள்ள ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதோடு, நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உதவும்.
இஞ்சி :
இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளின் அதிகம் நிறைந்த வேர் இருக்கும். எனவே சளி மற்றும் இரும்பல் போன்றவற்றை குணமாக்க உதவும்.
காலை தேநீரில் இஞ்சி கலந்து குடித்தால் சளி குறையும்.., இஞ்சி கலந்த வெதுவெதுப்பான நீரை குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மஞ்சள் :
மஞ்சள் ஒரு இயற்கையான அழற்சி எதிர்ப்பு மசாலா பொருள், இது பல நூற்றாண்டு காலமாக மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் குர்குமின் எனும் கலவை உள்ளது.., மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். காலை உணவில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பச்சை காய்கறிகள் :
தினமும் காலை ஒரு பச்சை காரட் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளலாம். வேக வைத்த கீரை, முட்டைகோஸ், மற்றும் பச்சைபயிறு எடுத்துக்கொள்ளலாம்.
இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், செரிமானத்திற்கு உதவும். காலை முளைகட்டிய பயிர்கள் சாப்பிட்டு வந்தால்.., இதயம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
பாதம் பருப்பு :
பாதம் பருப்பில் வைட்டமின் இ, உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.
தினமும் காலை ஊறவைத்த பாதம் பருப்பு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நார்ச்சத்து அதிகரிப்பதுடன் மற்றும் கெட்ட கொழுப்புக்களை குறைத்து விடும்.
பூண்டு :
பூண்டில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.
தினமும் ஒரு பூண்டு எடுத்துக்கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், மூட்டு வலியையும் குணப்படுத்தும்.
பழங்கள் :
ஸ்ட்ராபெரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பழங்களில் ஆக்சிஜனேற்றம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் காணப்படும்.
இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிகளுக்கு எதிராக போராட உதவுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post