பல நோய்களுக்கு மருந்தாகும் ஒரு கசாயம்..!
இந்தக் கால உணவு முறைகளில் செயற்கைப் பொருட்கள் நிறைந்ததாகும். அவற்றை உண்ணும் போது ஏற்படும், பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்த கஷாயம் சிறந்ததாகும் . இது அமிலத்தை சமநிலைப்படுத்தவும், ஜீரணத்தை அதிகப்படுத்தக்கூடியதும், வயிறு உப்பசம், வாயு பிரச்சனை, அல்சர் பிரச்சனை, வயிறு கட்டு நெஞ்செரிச்சல், ஜீரண மந்தம் போன்ற பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அவ்வாறு ஏற்பட்டால் அதனை தவிர்க்க உடனே வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கசாயம் செய்து குடித்து வர அவற்றை சரிசெய்யலாம். கஷாயம் என்பது நம் முன்னோர்களின் மருந்தாக இருந்த ஒன்று தான் .உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாக இதை செய்து குடிக்கலாம் . அவற்றை பார்க்கலாம் ……
தேவையான பொருட்கள்:
1. இஞ்சி
2. ஓமம்
3. சீரகம்.
செய்முறை:
* சீரகத்தையும் , ஓமத்தையும் லேசாக வறுத்துக் கொண்டு , இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி பிறகு நறுக்கிய இஞ்சியை போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும் . பின்பு வடிகட்டி மிதமான சூட்டில் பருக வேண்டும் அப்படிப் பருகினால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து உடனே நிவாரணம் பெற முடியும்.
குறிப்பு :
* குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் அளவும் ,பெரியவர்களுக்கு கால் டம்பளர் அளவும் குடிப்பது நல்லது.