உடல் எடை குறைக்க எளிய டிப்ஸ்..!
தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இரவில் படுக்கும் 2 மணி நேரத்திற்கு முன் உணவு உண்ண வேண்டும்.
மூன்று வேளையும் உணவை சாப்பிட்டு, மூன்று முறையும் சுண்டல்,பழங்கள் ஆகிய ஆரோக்கியமான ஸ்நாக் உட்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து வேலைகளில் கவனமாக இல்லாமல் நடு நடுவே 4 முறையேனும் எழுந்து ரிலாக்ஸ் செய்தல் வேண்டும்.
அன்றாடம் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.
அன்றாடம் குறைந்தது 6 நிமிடங்களுக்காவது தியானம் செய்ய வேண்டும்.
தினமும் குறைந்தது 7 டம்ளர் நீர் அருந்த வேண்டும்.
இரவில் கட்டாயம் 8 மணி நேரம் உறங்குதல் அவசியம்.
அன்றாடம் 9000 முதல் 10000 அடி நடத்தல் வேண்டும்.