இதை வெளிப்படுத்துவது, விமர்சிப்பது ஒரு தப்பா..?
நம்ப நடிகர் சிவகுமார் எதாவது பேசுனா சிலர் அதையே அப்படியே நம்பிடுறாங்க நம்ப ஆளுங்க.., நான் ஏன் சொல்லுறனா..
இப்போ உன் வருமானம் என்ன..? உன் மகன்களின் வருமானம் என்ன..? அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டியது தானே.. என்றெல்லாம் கேக்குறாங்க.
இல்லை, எனக்கு ஒரு விஷயம் புரியலை.. பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்போனா பீஸ் ( கட்டணம் ) அதிகமாயிடுச்சு, அதிலும் குறிப்பாக அவை லட்சக்கணக்கில் இருக்கிறது. அதுவும் பயமாகவும் வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்குது. இதை சொல்லுறதுல என்ன குற்றம் இருக்கு..?
அதை சொல்லுறவங்களோட வங்கி இருப்புக்கும் வருமானத்துக்கும் இப்படியான விமர்சனத்துக்கும் ஏன் எல்லாரும் தொடர்பு படுத்திக்குறாங்க..?
மாசம் 10 லட்சம் சம்பாரிச்சா, அவன் வருசம் 2, 3 லட்சம் School Fees கட்டியாகனுமா என்ன..? வருசத்துக்கு 32,000 கட்டி Engineering படிச்ச எனக்கு வருசம் 3 லட்சத்திலிருந்து 4 லட்சம் வரை வசூலிக்கப்படும் College Fees மலைப்பாகத் தான் இருக்கு.
எப்படி எல்லாராலும் கட்ட முடியும்..? கஷ்டப்பட்டோ, கடன் வாங்கியாே கட்டிப்படிக்கும் எல்லாருக்கும் வேலை கிடைத்து, வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடுமா என்ற கேள்வி எழுவது இயல்பு தானே.. குறைந்தபட்ச வட்டியோடு முதலீடு மட்டுமாவது திரும்ப கிடைக்கனுமே எல்லாருக்கும்.
இதை வெளிப்படுத்துவது, விமர்சிப்பது ஒரு தப்பா. ஏன் அது விழிப்புணர்வு ஏற்படுத்துவதா இருக்க கூடாதா என்ன..? நீங்களே சொல்லுங்க மக்களே..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..