தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவதால் என்ன பலன்..?
வீட்டில் விளக்கு ஏற்றுவதால் இருள்கள் நீங்கி.., ஒளி கிடைக்கும் என்பது உண்மை.
ஆனால் அதற்காக மட்டும் தான் நாம் விளக்கு ஏற்றுகிறோம்..? வீட்டில் விளக்கு ஏற்றுவதனால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.
வீட்டில் விளக்கு ஏற்றுவதனால் அன்னை மஹாலக்ஷ்மியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சு திரி வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.
சில பொருட்களை வைத்து தீபம் ஏற்றினால் செல்வம் அதிகரிக்கும்.
இழந்த செல்வங்களும் திரும்ப கிடைக்கும் என்பது ஆன்மீக உண்மை.
ஆனால் ஒரு சிலர் விளக்கு ஏற்றும் பொழுது பல தவறுகளை செய்து விடுகின்றனர். அப்படி நாம் செய்வதனால் காலத்திற்கும் கஷ்டம் வந்து சேரும்.
செல்வம் செழிக்க இப்படி செய்து பாருங்க :
பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது என்பதில் மிக கவனம் கொள்ள வேண்டும். காலை பிரம்ம முகூர்த்த நேரத்திலும், மாலை பிரதோஷ நேரத்திலும், விளக்கு ஏற்ற வேண்டும்.
பூஜை ரூமில் இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். வீட்டின் வாசப்படியிலும் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். இதனால் வளமான செல்வம் கிடைக்கும்.
எந்த வகையான தீபங்கள் ஏற்றலாம் :
கடன் பிரச்சனை உள்ளவர்கள், சொத்துக்களை இழந்தவர்கள், பணத்தை இழந்தவர்கள், 27 பஞ்சமிக்கு சிவ பெருமான் கோவிலுக்கு சென்று அகல் விளக்கில் சிகப்பு திரி கொண்ட 9தீபங்களை ஏற்ற வேண்டும். அவ்வாறு செய்தால்.., பரிகாரம் முடிவதற்குள் உங்களின் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்பது உண்மை.
ஆனால் பரிகாரம் செய்பவர்கள், பரிகாரம் செய்யும் நாளில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.
புகழ், செல்வம் அதிகரிக்க :
வீட்டில் வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கு வாங்கி, நெய் அல்லது விளக்கு எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி வழிபடலாம். இதனால் கணவன் மனைவிக்கு இடையேயான பாசம் அதிகரிக்கும்..,
சிவபெருமான் ஆலையத்திற்கு சென்று இழுப்ப எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி வழிபட்டால் கடன் பிரச்சனைகள் தீரும்.
விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் ஏற்றி வழிபடலாம், மஹாவிஷ்ணுவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி வழிபடலாம், மஹாலட்சுமி அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். இதனால் செல்வம் செழிப்பதோடு, மன நிம்மதியை கொடுக்கும்.
கடலை எண்ணெயில் தீபம் ஏற்ற கூடாது ஏன் தெரியுமா..?
பஞ்சமிமி திதி அன்று பசுநெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இழுப்ப எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களும் கலந்து பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி தீபம் ஐந்து முக தீபம் ஏற்றி வழிபட்டால் அம்மனின் அருள் கிடைக்கும்.
ஒரு சிலர் அறியாமல் விளக்கிற்கு கடலை எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றுவார்கள்.., அது தவறு. அப்படி செய்தால் கடன் சுமை அதிகரிக்கும்.
விளக்கு குளிர வைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை :
தீபம் ஏற்றியதில் இருந்து குளிர வைக்கும் வரை.., விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும். விளக்கை குளிரவைக்கும் பொழுது ஓம் சாந்த ஸ்ரூபினி நம என்று சொல்லி குளிர வைக்க வேண்டும். இப்படி செய்தால் வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். தீபம் தானாக குளிரும் வரை விடக்கூடாது.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..