மேற்குவங்கம் மாநிலத்தின் உள்ளாட்சி தேர்தலில் திரிணமுல் வெற்றி..!!
மேற்குவங்கம் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் பாஜக வந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் 73,887 உள்ளாட்சி பதவிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அன்று ஏற்பட்ட கலவரத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை துவங்கியது தேர்தல் அன்று ஏற்பட்ட கலவரத்தால்.., நேற்று வாக்கு எண்ணும் அதிகாரிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 3317 கிராம பஞ்சாயத்துகள் 2552 லும், 232 பஞ்சாயத்து சமீதிகள், 20 ஜில்லா 12 பரிஷத்துக்கள், அனைத்திலும் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் 7 பஞ்சாயத்து சமீதிகளிலும் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஒரு சில வாக்குசாவடிகளில் இருந்து இன்னும் வாக்குகள் பற்றிய தகவல் வெளியிடப்பட வில்லை, அந்த முடிவுகளும் இன்னும் சில நேரங்களில் வந்துவிடும்.
இந்த வெற்றி குறித்து மம்தா பானர்ஜி கூறியது, கிராமபுறங்களிலும் திரிணமுல் உள்ளது. எங்களுக்கு ஆதரவு கொடுத்து உங்களின் அன்பை வாக்காக அளித்த என் மக்கள் அனைவருக்கும் நன்றி.., உங்களுக்கு நான் கடமை பட்டு இருக்கிறேன். மக்கள் மனதில் திரிணமுல் தான் இருக்கிறது என்பதை இந்த தேர்தல் மீண்டும் நிரூபித்து விட்டது. இது எங்களுடைய வெற்றியல்ல நம்முடைய வெற்றி என மம்தா பானர்ஜி கூறினார்.
திரிணமுல் மீண்டும் வெற்றி பெற்றதை திரிணமுல் தொண்டர்கள் அனைவரும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.