இஞ்சியின் அற்புதமான பயன்பாடுகள்..!
இஞ்சியை அதிகமாக உணவில் எடுத்துக் கொள்வதின் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் இது ஆண்மை குறைவு உள்ளவர்களுக்கு பெரும்பாலும் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.
இரவில் அளவான உணவு எடுத்துக் கொண்டு பின் இஞ்சி டீ குடிக்க விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இஞ்சியை தினமும் சாப்பிடுவதால் ரத்த அணுக்கள் உறைந்து கட்டியாவது தடுக்கப்படுகிறது. இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராகிறது. ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்களுக்கு இது குறைக்கிறது.
இஞ்சி டீ குடிப்பதினால் சளி, தொண்டைகட்டு ஆகியவை குணமாகும். நீரிழிவு நோயாளிகளும் இஞ்சியை பயன்படுத்தலாம். ரத்தத்தில் இருக்கும் கொழுப்புகளை கரைக்கிறது.
செரிமானம் சீராகவும் உட்கொள்ளும் உணவிலிருந்து சத்துக்கலை உடலுக்கு தருகிறது. வாயு தொல்லை ஏற்படாமல் பாதுகாக்கிறது. சைனஸ், ஆஸ்துமா ஆகிய நோய் தாக்குதலில் இருந்து காக்கிறது.
ஒற்றை தலைவலியிலிருந்து விடுபட இஞ்சியை பயன்படுத்தலாம்.
உடலில் வலி மற்றும் வீக்கம் இருக்கும் இடத்தில் எண்ணெயுடன் இஞ்சி சாறையும் கலந்து உடம்பி தேய்த்து ஊறவைத்து குளிக்கலாம்.
வலி நிவாரணியாகவும் உடல் வெப்பத்தை குறைக்கவும் நாம் உட்கொள்ளும் மாத்திரைகள் கல்லீரலை சேதமாக்கும் அவற்றில் இருந்து காக்க இஞ்சி பயன்படுகிறது.