சிவப்பணுக்களை அதிகரிக்க இத சாப்பிடுங்க…!
- பாசிப்பயிறை வாரம் நான்கு முறையேனும் சாப்பிட வேண்டும்.
- முருங்கை கீரை வாரம் இரண்டு முறை சமையலில் சேர்த்துக் கொள்ளவும்.
- திராட்சையை வாரத்தில் இரண்டு முறையேனும் சாப்பிடுதல் வேண்டும்.
- சுண்டைக்காயை வாரம் இரண்டு முறையாவது சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- நெல்லிக்காய் அன்றாடம் ஒன்றை மென்று சாப்பிட வேண்டும்.
- பேரிச்சம் பழம் அன்றாடம் நான்கு உண்ண வேண்டும்.
- கருப்பட்டி வெல்லம் தினமும் சாப்பிடுதல் வேண்டும்.
- நாட்டுச் சர்க்கரை அன்றாடம் சேர்த்துக் கொள்ளலாம்.
- ஊறவைத்த கருப்பு உலர் திராட்சையை டெய்லி நான்கு சாப்பிடுதல் வேண்டும்.
- பீட்ரூட் ஜூஸ் அன்றாடம் 100 மில்லி பருக வேண்டும்.
- மாதுளையை வாரம் இரண்டு முறையேனும் ஜூஸாகவோ பழமாகவோ சாப்பிடலாம்.
- பீர்க்கங்காயை வாரம் இரண்டு முறை உணவில் பயன்படுத்த வேண்டும்.
- முளைக்கட்டிய சுண்டலை வாரம் இரண்டு முறை ஸ்நாக்காக சாப்பிடலாம்.