வரலட்சுமி-நிக்கோலாய் திருமணம்… பரவி வரும் வதந்திகளுக்கு சரத்குமார் பதிலடி..!
வரலட்சுமி :
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்கரான சரத் குமரின் மகள் வரலட்சுமி. இவர் வாரிசு நடிகையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர்.
இதனையடுத்து சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார் ஹீரோயினாக மட்டுமல்லாமல் வில்லி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து நடித்து வருகிறார்.
கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ர்வம் செலுத்தி வருகிறார். இதனால் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
திருமணம்:
இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் நடைப்பெற்றது. இவர் மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
பணதிற்காக திருமணம்:
வரலட்சுமி, நிக்கோலாய் பெரிய தொழில் அதிபர் என்பதற்காக தான் திருமணம் செய்துகொண்டார், நிகோலய் ஆபத்தானவர் போன்ற நெகடிவ் கருத்துக்களை பலரும் கூறி வந்தனர். அதுமட்டுமின்றி நிகோலவை உருவ கேலியும் செய்து வந்தனர். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சரத்குமார் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
சரத்குமார் பேட்டி:
அந்த பேட்டியில் நான் சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவர்களுடைய நேரம் போக வேண்டும் என்பதற்காக மற்றவர்களின் வாழ்க்கையை விமர்சித்து வருகின்றனர். உங்களுக்கு தைரியம் இருந்தால் நேரில் வந்து பேச வேண்டும்.. இப்படி சமூக வலைதளம் மூலமாக பேசுபவர்களுக்கு என்ன தைரியம் இருக்கிறது?
நான் என் மகள் வரலட்சுமிகாக பேசவில்லை எல்லா பெண்களுக்காகவும் தான் பேசுகிறேன். உங்கள் மனதில் எழும் கற்பனையை வைத்துக்கொண்டு மற்றவர்களை என்னவேண்டுமானலும் பேசுவதற்கான உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது?.
நான் எப்போதும் நெகடிவ் விமர்சனத்தை கண்டு கொள்ளமாட்டேன் ஆனால் சிலர் இந்த மாதிரி நெகட்டிவ் கருத்துக்களை தொடர்ந்து கூறி வருவது மனதளவில் வருத்தம் அளிகிறது.
என்னுடைய மகள் பணத்திற்காக திருமணம் செய்து இருக்கிறார்கள் என்று கருத்துகள் பல பரவி வருகின்றது. அதற்காக நான் கவலை கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.
வரலட்சுமி எதற்காக திருமணம் செய்துகொண்டார் என்பது அவருடைய முடிவு. அவர் நிக்கோலாயை மனதார காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் சிலர் தவறாக கமெண்ட் செய்துகொண்டு நேரத்தை வீணடித்து கொண்டு இருக்கிறார்கள் என்று சரத்குமார் கூறியுள்ளார்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”