இரத்த ஓட்டத்தை சீராக்க 10 வழிமுறைகள்..!
உடலில் ரத்த ஓட்டம் சீராக செயல்படவில்லை எனில் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சனை, நரம்பு வீக்கம் போன்ற பிரச்சனைகள் வரும்.
அதற்காக இரத்த ஓட்டத்தை சீராக வைக்க வேண்டியது மிகவும் முக்கியம். அதற்கான 10 வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.
மிளகு: உணவுகளில் காரத்திற்காக பயன்படுத்தப்படும் மிளகு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனை தினமும் உணவுகளில் சேர்த்து சாப்பிடும்போது ரத்த நாளமானது விரிவடைந்து உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
தக்காளி: உடலில் ரத்த ஓட்டம் சீராக செயல்பட லைகோபைன் உள்ள தக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது முக்கியம். இதிலிருக்கும் லைகோபைன் ரத்த ஓட்டத்த சீராக்கும்.
பூண்டு: பூண்டானது ரத்தத்தை சுத்தம் செய்யும் டானிக் ஆகும். இதை உணவில் சேர்த்து கொள்ளும்போது மணமாகவும் சுவையாகவும் இருக்கும் மேலும் ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.
கிரீன் டீ: கிரீன் டீயில் பாலிபீனால்ஸ், ப்ளேவனாய்டு, கேட்டச்சின் ஆகியவை இருக்கிறது, இவை ரத்த நாளங்களை விரிவடையச்செய்து ரத்த ஓட்டம் சீராக செயல்பட உதவுகிறது. எனவே தினமும் கட்டாயம் ஒரு கப் கிரீன் டீயை எடுத்துக் கொள்ளுங்கள்.
இரும்புச்சத்து உணவுகள்: பருப்புகள், கீரைகள், தானியங்கள், இறைச்சி மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் இருக்கும் இரும்புச்சத்து உணவுகளை சாப்பிடும்போது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது.
நட்ஸ்: முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகிய உணவுகளில் இருக்கும் வைட்டமின் பி3 ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.
டார்க் சாக்லேட்: டார்க் சாக்லேட்டில் இருக்கும் கோகோ ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. எனவே இவற்றை சாப்பிடும்போதும் ரத்த ஓட்டம் சீராகிறது.
உடற்பயிற்சி: வாக்கிங், சைக்கிளிங், ரன்னிங், எக்சர்சைஸ் ஆகிய ஒன்றை தொடர்ந்து செய்யும்போது உடலில் ரத்த ஓட்டமானது சீராகிறது.
புகைபிடிக்காதீர்கள்: புகைப்பிடிக்கும்போது வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. எனவே நீண்ட நாட்களுக்கு புகைப்பழக்கம் தொடரும்போது ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.