தென்னங்குருத்து..!
தென்னை மரத்தை வெட்டிய பின் அதன் அடிப்பகுதியில் கிடைக்கும் ஒரு தண்டு பகுதி தான் இந்த தென்னங்குருத்து. இது மரங்களை அழித்தால் மட்டுமே கிடைக்கும் ஒரு அறிய பொருள்.
சத்துக்கள் அதிகம் கொண்ட பல நோய்களை அதிகம் தீர்க்கக்கூடிய ஒரு அற்புத உணவுபொருளாக தென்னங்குருத்து உள்ளது.
மஞ்சள் காமாலை:
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தென்னங்குருத்தை சாப்பிடும்போது நல்லது நடக்கும். இந்நோயாளிகளின் சிறுநீரக பிரச்சனைகளை இது தீர்க்கும்.
சிறுநீரக கற்களை கரைக்க:
சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை சாப்பிட்டு தான் நாம் பார்த்திருப்போம் ஆனால் வாழைத்தண்டு அளவிற்கான சக்தி இந்த தென்னங்குருத்திற்கு உண்டு.
ஆண்மை குறைவு:
ஆண்கள் தென்ங்குருத்தை அடிக்கடி சாப்பிடுவதினால் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் ஆண்மை குறைபாடும் நீங்கும்.
மாதவிடாய் பிரச்சனைகள்:
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய் வலி, நோய் தொற்று ஆகியவற்றிற்கு தென்னங்குருத்து பயனுள்ளதாக இருக்கும். நீரில் தென்னங்குருத்தை கொதிக்க வைத்து அந்த நீரை மாதவிடாயில் குடித்து வரலாம்.
சளி மற்றும் தொண்டை வலி:
குழந்தைகளுக்கு சளி கட்டு ஆகியவற்றை தென்னங்குருத்து கொண்டு சரி செய்யலாம். நெஞ்சில் சளி கட்டு கூட கரைந்து வெளியேறும். இதனை மெலிதாக வெட்டு அதன் மேல் மிளகு தூள் தூவி சாப்பிடலாம்.
மலச்சிக்கலை தீர்க்க:
தென்னங்குருத்தில் நார்சத்து அதிகமாக உள்ளதால் இது வயிறு செரிமான பிரச்சனைகளை சரிசெய்து மலச்சிக்கலை தீர்க்க உதவுகிறது.
தைராய்டு மற்றும் நரம்பு தளர்ச்சி:
தைராய்டு நோயாளிகள் தென்னங்குருத்தை தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும் மருந்தாகவும் இது உள்ளது.
வயிற்றுப்புண்கள் சரிசெய்ய:
வயிற்றுபுண்களை ஆற்றும் தென்னங்குருத்து. வயிற்றில் அல்சர் உள்ளவர்கள் இந்த தென்னங்குருத்தை சாப்பிட வயிற்றில் இருக்கும் புண்கள் சரியாகும்.
