கணவருக்கு வந்த காய்ச்சல்.. வேண்டுமென்றே மருந்தை மாற்றிக் கொடுத்த மனைவி.. இறுதியில் நடந்த சோகம்..!
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா பகுதியை சேர்ந்தவர் சாஹினா பர்வீன். இவருக்கு நசிம் சர்தார் என்ற கணவர் உள்ள நிலையில், ஷேக் என்ற மருந்தாளுநர் ஒருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில், தனது கணவன் காதலுக்கு இடையூறாக உள்ளார் என்பதை அறிந்த சாஹினா, கள்ளக்காதலனனுடன் சேர்ந்து, அவரை கொல்ல முடிவு செய்துள்ளார்.
இதற்கான சரியான நேரம் எப்போது வரும் என்று காத்திருந்த அவருக்கு, அந்த நாள் வந்தது. அதாவது, சாஹினாவின் கணருக்கு, சமீபத்தில் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாத சாஹினா, மருந்தாளுநரான தனது கள்ளக்காதலனிடம் அழைத்து சென்றுள்ளார்.
அவர், அந்த காய்ச்சலுக்கு மருந்துக் கொடுப்பதற்கு பதிலாக, புற்றுநோய்க்கு வழங்கும் மருந்தை கொடுத்துள்ளார். இதனால், நசிம் சர்தாரின் உடல்நிலை மிகவும் மோசமாகி, அவர் தனது சுயநினைவை இழந்துள்ளார். இதையடுத்து, அவரது மனைவி, மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
ஆனால், மருத்துவர்கள் கடினமாக முயற்சி செய்தும், சிகிச்சை பலன் இன்றி, நசிம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நசிம் உயிரிழந்தது குறித்து அறிந்த அவரது குடும்பத்தினர், சாஹினாவையும், அவரது கள்ளக்காதலனையும், அடித்து உதைத்து, காவல்துறையில் ஒப்படைத்தனர். இதையடுத்து, அவர்கள் இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதலுக்காக, கணவரை கொலை செய்ய முயன்ற மனைவியின் இந்த செயல், அப்பகுதி மக்களிடையே, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்