கற்பூரவள்ளி இலையால் கிடைக்கும் பயன்கள்..!
கற்பூரவள்ளி இலையை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளமாம்.., அதை பற்றி பார்க்கலாம் …
நம்உடலில் ஏற்படும் அடிப்படை ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வகையில் இயற்கையானா பல்வேறு மூலிகைகள் நமக்கு கிடைக்கிறது.
அவை நம் வீட்டில் வளர்க்கப்படும் தாவரங்களுள் ஒன்றான துளசி, கற்பூரவள்ளி போன்றவை பெரும்பாலான வீடுகளில் இருக்கும் செடிகளாகும்.
இவற்றை பயன்படுத்தி நம் முன்னோர்கள், சளி, இருமல், தும்மல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை சரி செய்வார்கள்.
ஆனால் தற்போது உள்ள தலைமுறையினருக்கு அதன் மகத்துவம் பற்றி தெரிவதில்லை .மூலிகைகள் அதன் நன்மைகள் பற்றி விரிவாக பார்ப்போம்.
கற்பூரவள்ளி இலைநல்ல மனமுடையது ஆகும் .இதன் சுவையில் காரத்தன்மை சேர்ந்திருக்கும்..
இது நம் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு தீர்வளிக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த இலைகளை தினமும் மென்று சாப்பிட்டு வந்தால் மேலும் நற்பயன்கள் கிடைக்கும் .
1. வாய் துர்நாற்றத்திலுருந்து விரைவில் விடுபடலாம் .வாயும் புத்துணர்ச்சியுடன் காணப்படும் .
2. உடல் பலவீனமாக இருப்பவர்கள் தினமும் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ,உடலுக்கு வலிமை கொடுக்கும்.
3. எடை அதிகமாக உள்ளவர்கள் இந்த இலையை சாப்பிட்டால் ,வயிற்றை நிரப்பும் ,அதோடு மற்ற உணவுகளின் மீது உள்ள விருப்பத்தை குறைக்கும்.
4. ஜீரண கோளாறுகள் இருந்தால் ,சில நாட்களிலேயே சரியாகிவிடும் .
5. இது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும் .இதனால் சரும பிரச்சனைகளான முகப்பரு .தோல் அலர்ஜி ,போன்றவைகள் வராமல் தடுக்கும்.
6. பலருக்கு நாள்பட்ட சளி, இருமல் போன்றவற்றால் அவதிப்படுவார்கள். அந்த நேரத்தில், கற்பூரவள்ளி இலைகளை எடுத்து நன்றாக கசக்கி சாறு பிழிந்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும் அப்படி குடித்தால் நோயெதிர்ப்பு சக்தியை அதிக படுத்தி, விரைவில் குணமடைய வைக்கும்.
கற்பூரவள்ளி இலைகள் பெரியவர்களுக்கு மட்டுமின்றி சிறியவர்களுக்கு கொடுக்கலாம் .அடிக்கடி மருந்துகள் உட்கொள்வதை தவிர்த்து, இது போன்ற மூலிகைகளை பயன்படுத்தி நன்மைகள் பெறலாம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..