நெய் கூந்தலுக்கு இவ்ளோ பண்ணுமா…?
நெய் நாம் சாப்பிடுவதற்கு பயன்படுவது மட்டுமில்லாமல் நம்முடைய கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
நெய் கூந்தலில் பயன்படுத்துவதினால் அரிப்பு, பொடுகு ஆகிய பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கிறது.
நெய்யில் உள்ள சத்துக்களின் பண்புகள் தலையிக்கு வரும் அரிப்பு,பொடுகு தொல்லைகளுக்கு உதவுகிறது.
நெய்யில் வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ ஆகியவை நிறைந்திருப்பதினால் அத்துடன் தேங்காய் எண்ணெய், எலும்பிச்சை சாறு, வேப்பிலை கலந்து வீட்டிலேயே ஹேர் மாஸ்க் செய்து பயன்படுத்தலாம்.
நெய் தேவையான அளவு எடுத்து இளம் சூடு செய்து தலை முடியின் வேர்களிலும் கூந்தலின் மீதும் தடவினால், அது தலைமுடி வளர்ச்சி, கூந்தல் வெடிப்பு மற்றும் தலைக்கு ஈரப்பதத்தையும் தருகிறது.
ஹேர் மாஸ்க் :
போதுமான அளவு நெய்யுடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து,வேப்பிலை பொடியையும் சேர்த்து நன்றாக கலந்து முடியின் வேர்கள் மற்றும் கூந்தலில் தடவி ஒரு அரை மணி நேரம் ஊரவைத்து பிறகு மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசிவந்தால், முடி நன்கு வளர்ச்சியாகவும் சுத்தமாகாவும் இருக்க உதவும்.
Discussion about this post