மாவோயிஸ்டுகள் அராஜகம்..! தேர்தல் அதிகாரிக்கு கொலை மிரட்டல்..!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதற்காக வாக்கு சாவடிக்கு தேர்தல் அதிகாரிகள் வரக் கூடாது என மாவோயிஸ்டுகள் கொலை மிரட்டல் விட்டதாக ஒரு தகவல் வெளியாக்கியுள்ளது…
மேலும் அரசுக்கு ரகசிய தகவல் கொடுத்த பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மாவோயிஸ்டுகள் கொலை செய்துள்ளனர்..
சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17ம் தேதி சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. மேலும் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இருக்கும் பகுதிகளில்.., புதிய வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவோயிஸ்டுகள் பகுதிகளில் 120க்கும் மேற்பட்ட பழங்குடி கிராம மக்கள்.., முதல் முறையாக வாக்களிக்க இருக்கின்றனர்.
ஒருமுறை பலங்குடியினர் அங்குள்ள ஒரு கட்சிக்கு எதிராக குரல் எழுப்பிய நிலையில்.., மாவோயிஸ்டுகள் பழங்குடியினரை சுட்டு கொலை செய்து சாலையில் வீசி வருவதாக ஒரு போன் காலில் தெரிவித்துள்ளனர்.
மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் தேர்தல் அதிகாரிகளுக்கும் மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..