கொய்யா அதிகமாக சாப்பிடுவதினால் ஏற்படும் விளைவுகள்..!
ஒரு நாளைக்கு கொய்யா பழத்தை இரண்டு மட்டும் சாப்பிட்டால் அதுவே போதும் அதற்கு மேல் சாப்பிடும்போது சில நேரங்களில் மயக்கம், வாந்தி ஆகியவற்றை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்.
இரவில் கொய்யா பழத்தை சாப்பிடும்போது அது வயிற்றுபோக்கு மற்றும் வயிற்று வலி ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
முக்கியமாக கொய்யாபழத்தை சாப்பிட்டு முடித்தவுடன் உடனே தண்ணீரை குடித்தம் கூடாது, அப்படி செய்தால் அது தொண்டையில் ஒருவித வலியை உண்டாக்கும்.
வாத நோய் உள்ளவர்கள் அதிகமாக கொய்யா பழத்தை சாப்பிடுதல் கூடாது.
சளி, இருமல், ஆஸ்துமா ஆகிய பிரச்சனைகளை கொண்டிருப்பவர்கள் அந்த நேரத்தில் கொய்யா பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அதிக செரிமான பிரச்சனைகளை உடையவர்கள் கொய்யா பழத்தை அதிக அளவில் சாப்பிடக் கூடாது.
கொய்யா பழமானது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் எனவே நீரிழிவு நோயாளிகள் கொய்யாவை அளவாக சாப்பிடுதல் நல்லது.
கொய்யா பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது குடல்நோய், வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்சனைகளை உண்டாக்கும்.