தோசைக்கு தொட்டுக்க இறால் ஆணம்..!
தேவையான பொருட்கள்:
இறால் 250 கிராம்
வெங்காயம் 1
தக்காளி 1
உருளைக்கிழங்கு 1
இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
மிளகுத்தூள் 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் 1
தேங்காய் பால் 150 மிலி
கொத்தமல்லி இலை சிறிது
எண்ணெய் தேவையானது
உப்பு தேவையானது
தண்ணீர் தேவையானது
செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளி, மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து கிளறி வதக்க வேண்டும்.
பிறகு தக்காளி, மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
பின் ஒரு கப் தண்ணீர் சேர்த்து உருளைக்கிழங்கு வேகும் வரை கொதிக்க வைக்கவும்.
பிறகு இறால் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி கிளறி விட வேண்டும்.
அவ்வளவுதான் இறால் ஆணம் தயார், இதனை இட்லி, தோசை, சப்பாத்தி, ஆப்பம் ஆகியவற்றிற்கு தொட்டு சாப்பிட நல்லா பொருத்தமாக இருக்கும்.