இரவில் தூக்கம் வரவில்லையா அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!!
தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவர்க்கும் அடிப்படையான பிரச்சனை தூக்கமின்மை , அதற்கு உடல் சோர்வும், மனசோர்வும் முக்கிய காரணங்களாகும். ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் முதல் தேவை நிம்மதியான ஆழ்ந்த உறக்கம்…
ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 9 மணிநேரம் வரை தூக்கம் அவசியம். அப்படிப்பட்ட தூக்கம் இல்லாததே மனிதனுக்கு ஏற்படும் நோய்களுக்கு முக்கிய காரணியாகும்.
இன்று அனைவரும் cellphone உடன் அதிக நேரத்தை செலவிடுகின்றோம். அதுவும் தூக்கத்தை மறந்துவிட்டு ஓடிக்கொண்டு இருக்கிறோம். இந்த தூக்க பிரச்சனையில் இருந்து விடுபட , சில குறிப்புக்களை பார்க்கலாம் .
தூங்குவதற்கு முன் செய்ய வேண்டுயது :
1. செர்ரி சாறு தூக்கத்தை அதிகரிக்கும். இது டிரிப்டோபான் என்பது ஒரு அமினோ அமிலம். இது மெலடோனின் உற்பத்திக்கு உதவுகிறது.
இவை நாம் தூங்கும்போதும் எழுந்திருக்கும் போதும் உடலை கட்டுப்படுத்துகிறது. ஒரு நாளைக்கு 2 கப் (450 மி) செர்ரி சாறு குடிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறியுள்ளனர் . இதில் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது .
2. புதினா டீ-யில் காஃபின் இல்லாததால், நாம் நாள் முழுவதும் புதினா தேநீரை குடிக்கலாம். இது உடலை நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும் . புதினா செரிமானத்திற்கு உதவும்.
உணவுக்குப் பிறகு ஆற்றலை அதிகரிக்க மதிய உணவுக்குப் பிறகு தூங்குவதற்கு முன்பு நாம் புதினா டீயைக் குடித்தால் . ரிஃப்ளக்ஸ் நோய் மற்றும் புதினா ஒவ்வாமை உள்ளவர்கள் புதினா டீயைத் தவிர்ப்பது .
3. தூங்குவதற்கு முன் சூடான பால் குடித்தால் தூக்கத்தை மேம்படுத்தும் . பாலில் டிரிப்டோபான் இருப்பதால் இயற்கையாகவே இது செரோடோனினை அதிகரிக்கும்.
கூடுதலாக, செரோடோனின் மெலடோனின் முன்னோடியாகும். இது தூக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. நீங்கள் லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவராகவோ அல்லது பால் ஒவ்வாமை கொண்டவராகவோ இருந்தால், பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
4. அஸ்வகந்தா தேநீர் , தூக்கத்தின் தரத்தை அதிகரிக்கும் .இந்த தேநீரில் தூக்கத்திற்கு ஏற்ற கலவைகள் இருக்கும்.
அஸ்வகந்தா, ஏலக்காய், இலவங்கப்பட்டை மற்றும் ஜாதிக்காய் ஆகியவற்றை சூடான பாலில் சேர்த்து குடிக்கலாம். அஸ்வகந்தா தேநீர் பொதுவாக பாதுகாப்பானது தான்.
கர்ப்பிணி பெண்கள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் அல்லது தைராய்டு கோளாறுகளுக்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று கொண்டு அருந்தலாம் .
இவற்றில் உங்கள் உடலுக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்து அதை தினமும் இரவில் குடித்துவிட்டு, நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.
கண்ணெரிச்சல் ஏற்படும்.,
மன உளைச்சலை உண்டாக்கும்.,
உடல் சோர்வடையும்.,
இதயநோய்., தலைவலி போன்றவற்றை உண்டாக்கும்
மதிமுகம்-ல் வெளியாகும் ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தும் அதற்கு உரிய ஆலோசகர்களிடம் கேட்டு வெளியிடபடுகிறது., இருப்பினும் வாசகர்கள் தங்களுடைய உடல்வட்டதை பொருத்து இந்த பானங்களை குடிக்குமாறு கேட்டுகொள்கிறோம்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..