முக்கியமான மருத்துவ குறிப்புகள்..!
உடம்பில் வெட்டுக் காயம் ஏற்ப்பட்டால் குப்பைமேனி இலையை அரைத்து தடவி வர வெட்டுகாயம் செப்டிக் ஆகாது.
தேனீ கொட்டிவிட்ட இடத்தில் பழைய புளியில் சுண்ணாம்பு கலந்து பிசைந்து தேனீ கொட்டிய இடத்தில் அழுத்தி வைக்க சரியாகும்.
காதுகளில் கட்டி மற்றும் அடைப்பை சரியாக்க, தூதுவளை இலையை கசக்கி அதன் சாறை இரண்டு சொட்டு விடலாம்.
மலத்துடன் ரத்தம் வருவதை நிறுத்த மாதுளை பூவுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.
வாய்ப்புண் குணமாக தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்து வரலாம்.
தாய்ப்பால் வற்ற வைப்பதற்கு துவரம்பருப்பை ஊறவைத்து பன்னீர் சேர்த்து அரைத்து மூன்று நாட்கள் பற்று போடலாம்.
வாயு தொல்லை குணமாக வாதநாராயண இலையை காயவைத்து பொடியாக்கி அதனை சூடான நீரில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம்.
வயிற்று உப்பசம் குறைய சாதம் வடித்த நீரில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து சூடாக குடிக்க வேண்டும்.
குரல் வாயு குணமாக கொய்யா இலையின் கொழுந்தை மென்று சாப்பிடலாம்.