ஆரோக்கியமா வாழனும் ஆசையா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான சில முக்கியமான உணவு குறிப்புகள் பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். அதில் இன்று நாம் தெரிந்துக்கொள்ள இருப்பது.
குப்பைமேனி இலை மற்றும் வெள்ளைப்பூண்டை அரைத்து, ஒரு ஸ்பூன் குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றில் இருக்கும் புழு மலம் வழியாக வெளியேறி விடும்.

வெறும் குப்பைமேனி இலையை மட்டும் பொடி செய்து சாப்பிட்டால் இரும்பல் நீங்கும்.
நெருஞ்சி முள் 50 கிராம், கொத்தமல்லி விதை 5 கிராம், ஆகியவற்றை 500 மிலி நீரில் சுண்டக்காய்ச்சி.

காலை மாலை ஒரு டம்பளர் குடித்து வந்தால், கல்லடைப்பு, சதையடைப்பு, நீர்க்கட்டு மற்றும் நீர் எரிச்சல் பிரச்சனை குணமாகும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டின் அதிகம் இருப்பதால், கண் சம்மந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது. உடலின் உள் இருக்கும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.

பித்தத்தால் ஏற்படக்கூடிய வாந்தி, மயக்கம், பசி மற்றும் மந்தம் நீங்க, அன்னாசி பழம் சாப்பிடலாம்.
உடல் எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், தினமும் ஒரு அன்னாசிப்பழம் ஜூஸ் குடிக்கலாம்.
தினமும் நான்கு பேரீச்சைப்பழம் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான ரத்தத்தை உற்பத்தி செய்கிறது. ரத்த சம்மந்தமான நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..