சரக்கு இரயில் மீது எக்ஸ்-பிரஸ் இரயில் மோதி விபத்து..!! பரபரப்பான திருவள்ளூர்..!!
திருவள்ளூர் மாவட்டம் அடுத்த கவரைப்பேட்டை அருகே சரக்கு இரயில் மீது எக்ஸ் பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
மைசூரில் இருந்து ஆந்திரா வழியே தர்பங்கா செல்லும் “பாக்மதி அதிவிரைவு எஸ்பிரஸ்” சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சிகனலுக்காக நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் ரயில் எண் (12578),மீது மோதி விபத்துக்குள்ளானது.
பெரம்பூரில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்ட இந்த பாக்மதி அதிவிரைவு எஸ்பிரஸ் இரவு 8.27 மணியளவில் கவரைப்பேட்டையை வந்தடைய நிலையில் கால தாமதமாக 9.24 மணிக்கு வந்துள்ளது.
அப்போது தண்டவாளத்தில் சிகனலுக்காக நின்று கொண்டிருந்த சரக்கு இரயிலின் பின்புறத்தில் அதிவேகமாக வந்து மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது..
அந்த விபத்தில் இரயில் பெட்டிகள் தடம் புரண்டு தீ பற்றி எரிந்துள்ளது.. இதனால் பயணிகள் வெளியேற முடியாத சூழல் உருவாகியுள்ளது…
மேலும் மற்ற பெட்டிகளில் பயணித்தவர்களின் நிலை என்ன..?? இதுவரை உயிர் இழந்தவர்களின் நிலை.. என்ன என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை…
அதேபோல் பயணிகள் விரைவு ரயிலின் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது..
இந்த விபத்துகுறித்து தகவல் அறிந்து வந்த… திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர்., விரைந்து தீயணைப்பு துறை மற்றும் மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளார்..
மேலும் ரயில்கள் விபத்துக்குள்ளான இடத்திற்கு ரயில்வே அதிகாரிகள், மீட்புகுழுவினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..
மற்றும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கவரப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தின் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து இரயில் சேவைகளும் நிறுத்தபட்டுள்ளது.. என்பது குறிப்பிடதக்கது..