மன அழுத்தம் குறைக்க இந்த 7 விஷயங்கள்..!
இக்காலத்தில் பலருக்கும் பலவிதமான டென்ஷன் இருக்கிறது. வீட்டிலிருக்கும் பெண்களுக்கு குடும்ப பிரச்சனைகள், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலக பிரச்சனைகளும் சேர்த்து மன அழுத்தத்தை உருவாக்குகிறது. இதிலிருந்து உங்களை காக்க சில வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
யோகா செய்தல்:
தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டும். தியானத்தை முறையாக நல்ல ஆசிரியரிடம் பயிற்சி எடுத்து முறையாக செய்ய வேண்டும். அப்படி செய்யும்போது மனம் அமைதியடையும், மகிழ்ச்சி கிடைக்கும்.
இசை மற்றும் பாடல் கேளுங்கள்:
உங்களுக்கு பிடித்த பாடல் மற்றும் மெல்லியை இசையை கேக்க வேண்டும். எந்த கஷ்டத்தில் இருந்தாலும் உங்களுக்கு பிடித்த இசையை கேக்கும்போது மனம சுறுசுறுப்பாக மாறும்.
உணவில் கவனம்:
நல்லா சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான நல்ல உணவுகளை சாப்பிடுவதால் வாழ்க்கையும் ஆரோக்கியமாக இருக்கும்.
வாரம் ஒருமுறை வெளியில் செல்லுதல்:
வேலைக்கு செல்லும் பெண்கள் அலுவலக வேலை, வீட்டு வேலை ஆகியவற்றில் தொடர்ந்து அளுத்துபோய் இருப்பார்கள். அவர்கள் விடுமுறை நாட்களில் தங்களுக்கு பிடித்தவாறு அமைத்து கொள்ள வேண்டும்.
விடுமுறை நாட்களிலும் வீட்டில் இருக்கும் வேலையே கதி என்று இருந்துவிடக்கூடாது. அந்த நாட்களிலாவது வெளி இடங்களுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.
நேர்மறை எண்ணம்:
எல்லா விஷயங்களிலும் நேர்மறையான எண்ணம் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் உங்களின் காரியத்தில் நீங்கள் வெற்றி பெற முடியும். ஆனால் எதிர்மறையான எண்ணம் உங்களை பாதித்துவிடும்.
பதற்றம் வேண்டாம்:
ஒவ்வொரு விஷயத்திற்கும் பெண்கள் பதற்றம் அடையவார்கள். பதற்றம் அடைந்தால் பதற்றத்துடன் மன அழுத்தமும் அதிகரிக்கும். அதனால் அலுவலகத்திலும் வீட்டிலும் கெட்ட பெயர்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
திட்டமிடுதல் அவசியம்:
எந்தவொரு வேலையை தொடங்கும்போது திட்டமிட வேண்டும். மேலும் திட்டப்படி வேலையை செய்து முடித்தால் அதில் கிடைக்கும் சந்தோசம் மிகவும் பெரியது.