பேரீச்சம் பழத்தின் மருத்துவ பயன்கள்..!
நீரில் முந்திரி பருப்பு மற்றும் சிறிது பேரீச்சம் பழம் சேர்த்து கொதிக்க வைத்து வரும் கசாயத்தை தொடர்ந்து குடித்து வர உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கிறது.
பேரீச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து பின் குழந்தைகளுக்கு காலை மாலை என இருவேளைகளிலும் சாப்பிட வைத்தால் குழந்தைகளின் உடல் வலுவடையும், சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
பேரீச்சம பழத்தில் இருக்கும் விதைகளை நீக்கி அதனை பசும்பாலில் சேர்த்து வேகவைத்து பருகி வர இதய நோய்கள் தீரும். இதோடு இருமல் மற்றும் ஜலதோஷம் குணமாகும்.
சர்க்க்ரை நோயாளிகளுக்கு எலும்புகள் பலம் குறைந்து கொண்டே இருக்கும், இதற்கு சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பேரீச்சம் பழத்தை சாப்பிட்டு வர தேவையான சக்தி கிடைக்கும்.
பெண்களுக்கு கால்சியம் மற்றும் இரும்புச்சத்து என்பது அதிகமாக தேவைப்படும் ஒன்றாகும். பெண்களின் மாதவிடாய் காலங்களில் உண்டாகும் பலகினத்தை குறைத்து மாதவிடாய் சீராக நடக்க உதவுகிறது.
இது பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு ஆகிய பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
நுரையீரல், மூச்சுக்குழல் ஆகிய பகுதிகளில் உண்டாகும் அடைப்புகளை அகற்ற பேரீச்சை பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது.