சிவராமன் தற்கொலை குறித்து சீமான் பேச்சு..!! கடைசியாக பதிவு செய்யப்பட்ட வழக்கு..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், என்.சி.சி முகாமில் கலந்துக் கொண்ட 13 மாணவிகளிடம், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த போலி பயிற்சியாளர் சிவராமன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். அது தொடர்பாக பயிற்சியாளர் சிவராமனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்..
அப்போது காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததை சிவராமன் ஒத்துக்கொண்டார். அதே சமயம் எலி பேஸ்ட் உட்கொண்டுள்ளார்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவராமனிடம் விசாரணை நடத்திய போது.., சிறைக்கு சென்று விடுவோமோ என்ற அச்சத்தில் எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்…
இதற்கிடையே நேற்று அவர் மீது மீண்டும் ஒரு பாலியல் வழக்கு பதியப்பட்டது. அதாவது கடந்த ஜனவரி மாதம் கிருஷ்ணகிரி தாலுகா காவல்நிலைய எல்லைகுட்பட்ட தனியார் பள்ளி ஒன்றில் போலி என்சிசி முகாம் நடத்திய போது 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த மாணவியின் பெற்றோர் சிவராமன் மீது அளித்த புகார் அளித்துள்ளனர்.. மேலும் ஒரு போக்சோ வழக்கு சிவராமன் மீது பதிவு செய்யப்பட்டது..
இந்தநிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்..
அதனை அடுத்து அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து குற்றவியல் நடுவர் விசாரணைக்கு பிறகு, சிவராமனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
சிவராமன் உயிரிழப்பு தொடர்பாக கிருஷ்ணகிரி போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இச்சாபவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்..
அப்பொழுது அவர் கூறியதாவது., சிவராமன் கொஞ்ச காலத்திற்கு முன்பே சாகப்போகிறேன்.. என வருத்தம் தெரிவித்து எனக்கு கடிதம் எழுதியிருந்தார்.
கட்சித் தம்பிகளிடம் அதைக் கொடுத்து விசாரிக்கச் சொன்னேன். தவறு செய்தது தெரிந்ததும், அவரை போலீசில் பிடித்துக் கொடுத்ததே நாம் தமிழர் தம்பிகள்தான். குற்ற உணர்ச்சி இருந்ததால்தான் தற்கொலை செய்துள்ளார். மகன் செய்த தவறால் அடைந்த மனவேதனையில் அப்பாவும் மதுபோதையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதில் எந்த சந்தேகமும் இல்லை, இதன் பின்னணியில் யாரும் இல்லை என்று கூறியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..