பச்சிளம் குழந்தையின் பாதுகாப்பு வழிமுறைகள்..!
-
புதிதாக பிறந்த குழந்தைக்கு அன்றாடம் பலதடவை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
-
ஒரு நாளைக்கு 6 முதல் 12 முறை வரை தாய்ப்பால் தரலாம்.
-
பிறந்த குழந்தை இரவு மற்றும் பகல் எனப் பாராமல் அதிக நேரம் உறங்குவார்கள்.
-
குழந்தை தூங்கிக்கொண்டிருந்தால் அப்பறம் பசி ஆற்றலாம் என நினைக்காமல் அவ்வபோதே தட்டி எழுப்பி பசி ஆற்ற வேண்டும்.
-
குழந்தையின் தூங்கும் நேரத்தை கணக்கிட்டு அதற்கு ஏற்றவாறு உணவளித்து தூங்க விட வேண்டும். பிறந்த குழந்தையின் வளர்ச்சி நன்றாக உறங்குவதில் தான் உள்ளது.
-
குழந்தை விழித்திருகும் நேரம் குறைவாக இருந்தாலும், அவர்கள் தூங்காத நேரத்தில் அவர்களுடன் பேசுங்கள். குழந்தையின் பெயரைச் சொல்லி கூப்பிடுங்க. குழந்தை பேசாவிட்டாலும் அவர்கள் அந்த குரலை கவனிப்பார்கள்.
-
நோய்த்தொற்று உள்ளவர்கள் குழந்தையை தூக்குவதை தவிர்க்க வேண்டும்.
-
குழந்தை தூங்கும் சமயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
-
குழந்தை உறங்கும் இடத்திற்கு அருகில் எந்தவொரு பொருட்களையும் வைக்க கூடாது.
-
குழந்தை பிறந்த ஒரு மாதத்திலே குழந்தைக்கு தடுப்பூசி தேவைப்படும். அதனால் தடுப்பூசி அட்டவணைப்படி தவராமல் தடுப்பூசியை செலுத்திவிட வேண்டும்.
-
குழந்தையை தூக்கும் தாய், உடலையும் கைகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
-
குழந்தை அணிந்திருக்கும் டயப்பரை அடிக்கடி மாற்றிவிட வேண்டும்.
-
குழந்தையின் சுத்தம் அவர்களின் வளர்ச்சியை சிறப்பிக்கும்.