சுவையான பீட்ரூட் ரசம் ரெசிபி…!
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் – 1
தக்காளி – 1
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
ADVERTISEMENT
-
பீட்ரூட்டின் தோல் நீக்கி சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
-
ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி, பீட்ரூட் துண்டுகள், சீரகம், மிளகு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
-
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அரைத்த விழுதை சேர்த்து உப்பு கலந்து கொதிக்க விடவும்.
-
தாளிப்பதற்கு ஒரு வாணலை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி அந்த ரசத்தில் சேர்க்கவும்.
-
பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி இறக்கினால் சுவையான பீட்ரூட் ரசம் தயார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.