இருமல் சளி தொல்லையிலிருந்து விடுபட இதை ட்ரை பண்ணுங்க..!
நம் உடலில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று சளி மற்றும் இருமல். இதற்காக நாம் உடனே மருத்துவமனைக்கு சென்று மருந்து மாத்திரைகளை உட்கொள்ளவதோடு, பணத்தையும் வீணடிக்கிறோம். மருந்து மாத்திரைகள் அதிகமாக சாப்பிடும் போது, கிட்னி பாதிக்கும் அபாயம் உள்ளது.
நம் முன்னோர்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து உடல் பிரச்சனைகளை சரிசெய்து விடுவார்கள். இப்போது syrup, tonic இவற்றை குடிக்கிறோம். ஆனால் அப்போது கசாயம் வைத்து குடிப்பார்கள்.. நாம் அவற்றை பின்பற்றினாலே நம் உடலை பாதுகாத்து கொள்ள முடியும். அதை பற்றி பார்க்கலாம்..
1. துளசி, கற்பூரவள்ளி, வெற்றிலை நான்கு துண்டாக கிழித்து மிளகு, சீரகம், இஞ்சி இவற்றை இடித்து சிறிது மஞ்சள்தூள் கல் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பின்பு வெதுவெதுப்பாக குடிக்க வேண்டும்.
2. இரவில் தூங்குவதற்கு முன்பு காய்ச்சிய பாலில், சிறிது மஞ்சள் தூள்,மற்றும் இஞ்சி நசுக்கி போட்டு குடித்து வந்தால், நாள் பட்ட இருமல் சரியாகிவிடும்.
பெரியவர்கள் அரை டம்பளரும், சிறியவர்கள் கால் டம்பளரும் வாரத்தில் மூன்று வேலை இரண்டு தடவை குடித்து வந்தால் இருமல் சளி தொல்லையிலிருந்து விரைவில் விடுபடலாம். கைவைத்தியம் என்பது நம் வீட்டு சமையலறையில் இருக்கும் ஒன்று தான். இவை நம் பாரம்பரிய பாட்டி வைத்திய முறையாகும் .
– நிரோஷா மணிகண்டன்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..