இனி யுபிஐ மூலம் டிக்கெட்..சென்னை பேருந்து பயணிகளுக்கு குட் நியூஸ்….!
பேருந்துகளில் சில்லரை கொடுத்து டிக்கெட் வாங்கும் காலம் மாறி தற்போது இன்னொரு சுலபமான முறையில் டிக்கெட் எடுக்கும் வசதியை சென்னை பேருந்து கழகம் அறிவித்துள்ளது.
யுபிஐ மூலம் டிக்கெட்:
இனி சென்னையில் அனைத்து பேருந்துகளிலும் யுபிஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் இது தொடர்பாக சென்னை மாநகர பேருந்து கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் உள்ள 22 டிப்போக்களிலும் மின்னணு டிக்கெட் இயந்திரங்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த மின்னணு டிக்கெட் இயந்திரங்கள் இப்போது அனைத்து டிப்போக்களிலும் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்கள் மூலம் யுபிஐ கார்டு மற்றும் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம். இதற்காக நடத்துநர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் சென்னை எம்டிசி பேருந்துகளில் பொதுமக்கள் எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயணிக்கலாம். மேலும் சென்னை பேருந்துகளில் பயணிப்போர் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
-பவானிகார்த்திக்